நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி? | How To Calculate Interest Rate in Tamil

Advertisement

How To Calculate Gold Loan Interest In Tamil

நகை கடன் வட்டி | vatti calculation in tamil: அவசர தேவைக்கு பணம் புரட்டுவதற்கு தங்க நகை கடன் என்பது ஒரு சிறந்த வழி. தங்க நகை கடன் உண்மையில் ஒரு பாதுகாப்பான திட்டம். நகை கடனுக்கு பெரிதாக ஆவணங்கள் தேவைப்படுவதில்லை. மேலும் நமது நகைகள் வங்கியில் இருப்பதால் பயமும் இருப்பது இல்லை. ஆனால் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி வரும் என்பதும் எத்தனை மாதம் தங்களது நகையை வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அடகு வைத்துள்ள தங்க நகை கடனுக்கு வட்டி எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

தங்க நகைக்கடன் – How To Calculate Interest In Tamil

vatti calulation in tamil

தங்க நகை கடன் என்பது நீங்கள் வைத்துள்ள தங்க நகையின் மதிப்புக்கு ஏற்ப கடன் வழங்கப்படும். நகையை திரும்ப பெறுவதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு கால அவகாசம் கொடுக்கப்படும். நகையை மீட்பதற்கு தங்களது அசல் தொகை மற்றும் வட்டியை செலுத்தி நகையை மீட்க வேண்டும்.

வங்கி வட்டி கணக்கிடுவது எப்படி – எந்த நகைக்கு நகை கடன் வழங்கப்படும்:

thanga nagai kadan in tamil

நகைகளில் உள்ள தங்கத்தை பொறுத்தே நகை கடன் வழங்கப்படுகிறது. தங்க காசுகள் (Gold Coin), தங்க கட்டிகள் (Gold Biscuit) இவற்றை அடகு வைக்கவோ, விற்கவோ முடியாது. மேலும் நகையில் கல் (stone) இருந்தால் அதற்கு தனியாக கழிவு போட்டு மீதம் உள்ள தங்கத்திற்கே நகை கடன் வழங்கப்படும்.

பொதுவாக 916, 916 Hall Mark போன்ற நகைகளுக்கு அதிக மதிப்பும் 22 Ct, 22 KDM போன்ற நகைகளுக்கு குறைந்த மதிப்பும் வழங்கப்படுகிறது. நகையை நகை மதிப்பீட்டாளரால் (Appraiser) சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் வழங்கப்படும்.

Vatti Calculation in Tamil | நகை வட்டி கணக்கிடுவது எப்படி:

அனைத்து வங்கிகளிலும் நகை கடனுக்கான வட்டி நாள் கணக்கின் முறையில் கணக்கிடப்படும். அதாவது தங்கள் எந்த தேதியில் அடகு வைத்தீர்களோ அந்த தேதியில் இருந்து கணக்கிடப்படும். உதாரணத்திற்கு தாங்கள் 18.07.2021 அன்று அடகு வைத்துள்ளீர்கள் என்றால் வங்கியில் அதற்கு முந்தைய நாளிலிருந்து 17.07.2021 கணக்கிட ஆரம்பிப்பார்கள். அடுத்த மாதம் நீங்கள் 17.08.2021 அன்று வட்டி செலுத்த வேண்டும்.

nagai kadan vatti ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் வேறுபடும்.

(31X11%X5000/365) (நாள்X வட்டிவிகிதம் %Xஅசல்/வருடம்) 

நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி: உதாரணம் நாள் என்பதை 31 என்று வைத்து கொள்ளுங்கள் வட்டிவிகிதத்தை 11% என்று வைத்து கொள்ளுங்கள். அசல் 5000 என்று வைத்து கொள்ளுங்கள். வருடம் 365 என்றும் வைத்து கொள்ளுங்கள்.

31X11%X5000/365 = 47

5000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கான வட்டி 47 இந்த முறையில் தான் நகை கடன் வட்டி கணக்கிடப்படுகிறது.

வட்டி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்?

ஒரு வருட காலம் வரை தங்களது நகை வங்கியில் இருக்கும். நகையை திருப்ப முடியாதவர்கள் தங்களது நகைக்கு வட்டி செலுத்தி Renewal செய்து கொள்ளலாம். வட்டியை செலுத்தவில்லை என்றால் கூட்டுவட்டி செலுத்த வேண்டி வரும். கடனை செலுத்த முடியாதவர்களது நகை ஏலம் விடப்படும்.

வங்கி வட்டி கணக்கிடுவது எப்படி – நகை அடகு வைக்க – தேவைப்படும் ஆவணங்கள்:

gold loan interest rate

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்களது சொந்த நகைகளை அடகு வைக்கலாம். அடகு வைப்பதற்கு தங்களுடைய Aadhar card, passport size photo, Pancard தேவைப்படும். வங்கியில் நகை கடன் வைக்க விரும்புவோர் இந்த முறையின் படி கால்குலேட் செய்து பாருங்கள் நன்றி.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement