கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா
பல வருடங்களாக ஒரு கேள்விக்கான பதிலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அந்த கேள்வி கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை சரியான விடையாக யாராலும் கொடுக்க முடியவில்லை. அறிவியல் ஆய்வுகளில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கக்கூடிய இந்த கேள்வி, வேடிக்கையாக, விளையாட்டாகக் கேட்கப்படும் கேள்வியாக மாறியது. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம்.
முதலில் கோழி வந்ததா, முட்டை வந்ததா:
முதலில் முட்டை வந்ததா, கோழி வந்ததா என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. கோழி தான் முதலில் வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம். ஒரு முட்டை உருவாவதற்கு புரதம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. OV-17 என்ற புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதம் கோழியின் ஓட்டில் தான் இருக்கிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் கோழியின் கருவில் மட்டும் தான் இந்த புரதம் உற்பத்தி ஆகின்றது. அந்த வகையில் கோழி தான் முதலில் வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . இப்போது கோழி எப்படி வந்தது என்ற கேள்வி இருக்கும். அதற்கான பதிலை தெரிந்து கொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ வெறும் கையில் முழம் போடுவதுஎன்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?
மரபணுக்களில் பிறழ்வு ஏற்படும் போது ஒரு புதிய உயிரினம் உருவாகும். முட்டை கருவுக்குள் இருக்கும் செல்களில் இவ்வகையான மரபணு திரிபு மாற்றம் ஏற்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது பல வருடங்களுக்கு முன்பு கோழிக்குஞ்சு போல இருக்கும் விலங்குகள் இனப்பெருக்கம் செய்யும் போது மரபணு திரிபு ஏற்பட்டு கோழிக்குஞ்சு DNA கூறுகளுடன் பிறந்துள்ளது. மேலும், திரிபு மரபணுவுடன் உருவான முட்டையில் வெளிவந்த வந்தது தான் மரபணுவில் இருந்து மாறிய முதல் கோழிக்குஞ்சு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு முட்டையில் மரபணு மாற்றம் ஏற்பட்டால் எல்லா முட்டைகளுக்கும் பொருந்தாது. மரபணு மாற்றத்துடன் பிறந்த கோழிக்குஞ்சு தான் தற்போது நாம் பயன்படுத்தக்கூடிய கோழி மற்றும் முட்டையாக காணப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் ⇒ ‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |