Four Dots in Newspaper Meaning in Tamil
வணக்கம் அன்பார்ந்த நேயர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப் போகிறோம். என்ன தான் இந்த கால கட்டத்தில் மொபைல் போன் உலகில் நடக்கும் பல தகவல்களை நமக்கு தெரியப்படுத்தினாலும் News paper க்கு இணையாக முடியாது.
அந்த காலத்தில் இருந்து இந்த கால கட்டம் வரை News paper சேவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உலகில் நடக்கும் அனைத்து தகவல்களையும் கூறும் ஓர் புத்தகம் என்று News paper யை கூறலாம். அந்த வகையில் News paper- ன் கீழே உள்ள நான்கு வண்ண புள்ளிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?
News paper- ல் அந்த புள்ளிகள் ஏன் அச்சிடப்பட்டிருக்கின்றன காரணம் தெரியுமா..? நாம் இன்று இந்த பதிவின் மூலம் Newspaper – ல் உள்ள அந்த வண்ண புள்ளிகள் சொல்லும் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!
நியூஸ் பேப்பரில் உள்ள புள்ளிகள் சொல்லும் கதை என்ன..?
அனைவருக்குமே செய்தி தாள் படிக்கும் பழக்கம் இருக்கும். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நியூஸ் பேப்பர் படித்து பார்த்திருப்போம். நாம் நியூஸ் பேப்பர் படிக்கும் போது அதன் ஒவ்வொரு பக்கத்தின் கீழ் பகுதியில் 4 வண்ண புள்ளிகள் இருப்பதை என்றாவது கவனித்திருக்கிறீர்களா..? அப்படி அந்த புள்ளிகள் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசிப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்…
செய்தித்தாள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்று கூறலாம். அலுவலகங்களில் தொடங்கி பள்ளிகள், டீ கடை போன்ற கடைகள் வரை செய்தித்தாள் படிப்பதற்கென ஒரு தனி கூட்டமே இருக்கிறது.
அந்த காலத்தில் செய்தித்தாள்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே அச்சிடப்பட்டன. ஆனால் இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செய்தித்தாள்களும் வண்ண நிறங்களில் அச்சிடப்படுகின்றன.
அதுபோல தான் அந்த நான்கு வண்ண புள்ளிகளும் இருக்கின்றன. செய்தித்தாள்களின் கீழே இருக்கும் அந்த நான்கு வண்ண புள்ளிகளையும் CMYK என்ற எழுத்துக்களால் குறிக்கின்றனர்.
C– என்பது நீல நிறத்தைக் குறிக்கும்.
M– என்பது மெஜந்தா எனும் இளஞ்சிவப்பு நிறத்தை குறிக்கும்.
Y– என்பது மஞ்சள் நிறத்தை குறிக்கும்.
K– என்பது கருப்பு நிறத்தை குறிக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு எத்தனை செய்தித்தாள்கள் அச்சிடுகிறார்கள் என்று பார்ப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதற்காக தான் இந்த வண்ண புள்ளிகள் அச்சிடப்படுகின்றன.
செய்தித்தாளில் உள்ள அந்த 4 வண்ண புள்ளிகளும் சரியான இடத்தில், சரியான வரிசையில் மற்றும் தெளிவாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் அந்த புள்ளிகள் குறையுடன் இருந்தால் அல்லது தெளிவில்லாமல் இருந்தாலோ, வரிசை மாறியிருந்தாலோ அல்லது ஒரு புள்ளியின் மீது மற்றொறு புள்ளி இருந்தாலோ அந்தத் தாள் சரியாக அச்சிடப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த காரணத்திற்காக தான் அந்த நான்கு வண்ணப் புள்ளிகள் செய்தித்தாள்களில் அச்சிடப்படுகின்றன.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |