பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? What is Patta Chitta Adangal in Tamil..!

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன? What is Patta Chitta Adangal in Tamil..!

மனை தொடர்பானது ஆவணங்களில் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய மூன்று ஆவணங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த ஆவணங்களை பற்றி இன்னும் பலருக்கு தெரியாமல் தான் இருக்கின்றது. எனவே இந்த பதிவில் பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன? என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

பட்டா என்றால் என்ன?

பட்டா சான்றிதழ் என்பது நாம் வாங்கிய நிலம் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளும் ஒரு சான்று.

நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

சர்வே எண் / புல எண் என்றால் என்ன?

ஒரு ஊரில் சுமார் 100 ஏக்கர் நிலத்தை தலா 100 நபர்களுக்கு பிரித்து கொடுத்து, ஒன்று முதல் 100 எண்களை அடையாளமாக வைத்து கொள்வதுதான் சர்வே எண்.

உதாரணத்திற்கு 1-ம் எண்ணை அடையாளமாக கொண்டவர்களின் நிலத்தின் சர்வே எண் 1 என அளிக்கப்படுகிறது.

உட் பிரிவு எப்படி பிரிகிறார்கள்?

சர்வே எண் என்ற நிலத்தின் அளவு ஒரு ஏக்கர் என்று வைத்து கொள்ளலாம். அவர்களிடமிருந்து 10 செண்ட் நிலத்தை தாங்கள் வாங்குகின்றீர்கள் என்றால், நிலத்தின் சர்வே எண் 1/A  என்று குறிப்பிடப்படும் இவற்றில் A என்பது உட் பிரிவு.

நிலத்தின் தன்மை:

நிலத்தின் பயன்பாட்டை வைத்து அந்த நிலங்களை பல வகைகளாக பிரிக்கலாம். அதாவது நஞ்சை, புஞ்சை, நத்தம் மற்றும் புறம்போக்கு என நிலத்தின் தன்மைகளை பிரிகின்றன.

சிட்டா என்றால் என்ன?

சிட்டா என்பது பல பட்டாக்களின் தொகுப்பு பதிவேடு ஆகும். அதாவது ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நஞ்சை அல்லது புஞ்சைபயன்பாட்டில் இருக்கிறதா என்ற விவரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விவரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடங்கல் என்றால் என்ன?

ஒரு கிராமத்தில் உள்ள மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுகள் தான் அடங்கல் எனப்படும். அடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களுக்கு உரிய நிலம் யாருடைய பெயரில் உள்ளது, பட்டா எண், நிலத்தின் தன்மை என்ன போன்ற விவரங்கள் இவற்றில் இருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News