Petrol Smell Reason in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசனை பிடிக்கும். சிலருக்கு பூக்களின் வாசனை பிடிக்கும். சிலருக்கு பழங்களின் வாசனை பிடிக்கும். அதுபோல சிலர் மண் வாசனையை அதிகம் விரும்புவார்கள்.
சிலர் ஈரமான புல் வாசனையை விரும்புவார்கள். இதுபோல பல வாசனைகள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். இதுபோன்ற வாசனைகளில் பெட்ரோல் வாசனையும் ஓன்று. அனைவரையும் மயக்கும் பெட்ரோல் வாசனையின் ரகசியம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சிவப்பு நிறம் ஏன் எச்சரிக்கை ஒளியாக இருக்கிறது காரணம் தெரியுமா..? |
பெட்ரோல் வாசனையின் ரகசியம் என்ன..?
ஒவ்வொரு மனிதனும் ஒரு சில விஷயங்களை ரசிக்கிறார்கள். நாம் மேல் பார்த்தது போல பூக்கள், பழங்கள், மண் வாசனை என்று பல வாசனைகள் இருந்தாலும் இவை அனைத்தும் இயற்கையான வாசனை என்று சொல்லலாம்.
ஆனால் இதையும் தாண்டி ஒரு வாசனை நம்மை மயக்குகிறது என்று சொன்னால் அது பெட்ரோல் வாசனை தான். இந்த வாசனையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இதுபோல பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றின் வாசனைகளை பலரும் விரும்புவார்கள்.
நம்மை மயக்கும் அளவிற்கு இந்த பெட்ரோலில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம்.
பெட்ரோலில் 150 வகையான இரசாயன கலவைகள் கலக்கப்படுகின்றன. அதில் இருக்கும் கலவைகளில் நம் மனதை மயக்கும் ஆற்றலை கொண்டுள்ள கலவை தான் பென்சேன். இந்த பென்சேன் என்ற ஹைட்ரோ கார்பனானது, நம் மூளையை தூண்டும் டோபொமைன் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.இந்த பென்சேன் தான் பெட்ரோலுக்கு வாசனையை கொடுக்கிறது. இதனால் தான் பெட்ரோல் வாசனையை நாம் அதிகம் விரும்புகின்றோம்.
நாம் பெட்ரோல் வாசனையை அதிகம் நுகரும் போது அது நம்மை போதை நிலைக்கு தள்ளுகிறது. பெட்ரோலில் பென்சேன் 1% சேர்க்கப்பட்டாலும் அதன் தன்மை காற்றில் அதிகளவு பரவுகிறது.
இந்த பென்சேன் பெட்ரோலில் மட்டுமல்லாமல் நாம் பயன்படுத்தும் Tennis Ball, Nail Polish, Paint போன்ற பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.
இந்த வாசனை அனைவருக்கும் பிடித்திருந்தாலும், இதை நுகர்வதால் பல ஆபத்துகளும் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பென்சேன் வாசனை நம் உடலுக்குள் சென்றால் அது நுரையீரலை பாதிக்கிறது. இதனால் மூளைக்கு செல்லும் நரம்புகள் உணர்விழந்து மனநலம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சாலைகளில் மூன்று விளக்குகள் உணர்த்தும் செய்திகள் உங்களுக்கு தெரியுமா.? |
இதுபோன்று interesting-information தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Interesting Information |