ஏற்றுமதி | Export in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் ஏற்றுமதி என்றால் என்ன.? ஏற்றுமதி எப்படி செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். நாம் தெரிந்து கொள்வதற்கு அதிகமான விஷயங்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்றுதான் ஏற்றுமதி. நம் நாட்டில் இருந்து என்ன பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள், அதை எப்படி ஏற்றுமதி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் ஏற்றுமதி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் போன்றவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி? |
ஏற்றுமதி என்றால் என்ன.?
ஏற்றுமதி என்பது ஒரு உள்நாட்டில் அதிகமாக விளைய கூடிய பொருட்களை அதனுடைய தேவைகள் உள்ள நாட்டிற்கு விற்பனை செய்வதே ஏற்றுமதி ஆகும். அதாவது உதாரணத்திற்கு உணவு பொருட்கள், இயந்திரங்கள், ஆடைகள் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதே ஏற்றுமதி ஆகும்.
இவ்வாறு ஏற்றுமதி செய்வதினால் ஒரு நாட்டினுடைய நட்பும், ஒற்றுமையும் கிடைக்கிறது. அதோடு ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், அரசியல் வளர்ச்சியும், சமுதாய வளர்ச்சியும் இருப்பதற்கு முக்கிய காரணமே ஏற்றுமதி தான்.
ஏற்றுமதி செய்வது எப்படி
ஏற்றுமதி என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கென்று பல நிபந்தனைகளும் இருக்கின்றன. முதலில் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை என்னவென்றால் எந்த நாட்டில் எந்த பொருளின் விளைச்சல் குறைவாக உள்ளது என்றும், அந்த நாட்டிற்கு எந்த பொருள் தேவைப்படும் என்றும் அறிந்திருக்க வேண்டும்.
முதலில் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு சிறிய அளவிலான ஆடர்களை எடுத்து அதனை சரியான முறையில் அனுப்ப வேண்டும். அதன் பிறகு இவை சரியான முறைகளில் நடக்கும் பொழுது பெரிய அளவிலான ஆடர்களை எடுத்து செய்ய வேண்டும்.
பொதுவாகவே மக்கள் பொருட்களின் விலையை விட அதனுடைய தரத்தை தான் அதிகம் விரும்புவர்கள், அந்த வகையில் நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் உடனடியாக அனுப்புவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த ஏற்றுமதி தொழிலை தொடங்குவதற்கு லைசன்ஸ் மிகவும் அவசியமான ஒன்றாகும். லைசன்ஸ் பெற்றுவிட்டால் ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கலாம். ஏற்றுமதி செய்வதற்கு எந்த பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு, மேம்பாட்டு குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். மேலும் ஏற்றுமதி தொழிலை தொடங்க என்ன தேவை என்பதை தெரிந்துகொள்வோம்.
ஏற்றுமதி பொருட்கள்:
ஏற்றுமதி செய்வதற்கு முன்பு எந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது என்றும், எதை செய்யக்கூடாது என்றும் கவனிப்பது அவசியம். அதாவது அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது நல்லது. உணவு பொருட்களின் உற்பத்திகள் வெளிநாடுகளில் குறைவாக இருப்பதினால் உணவு பொருட்களான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.
ஏற்றுமதி செய்வதற்கு முன்பு:
முதலில் ஏற்றுமதி செய்யும் பொழுது தனிநபராக செய்ய முடியாது. ஒரு நிறுவனத்தில் இணைந்து இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு இருப்பதினால் ஏற்றுமதிக்கான லைசன்ஸ் கிடைக்கும். எனவே முதலில் நிறுவனத்தை பதிவு செய்த பிறகு தான் நாம் எதை ஏற்றுமதி செய்வது என்று முடிவெடுக்க வேண்டும்.
முடிவெடுத்த பிறகு நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்றும் குறிப்பாக நிறுவனங்களின் பெயர் கடைசியில் Exports, International, Overseas போன்ற பெயரில் முடிய வேண்டும்.
அடுத்ததாக நிறுவனத்தின் பெயரை முடிவு செய்த பிறகு Email Id, விசிட்டிங் கார்டு, ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை நிறுவனத்தை பதிவு செய்வதற்கு மிகவும் அவசியம். அதோடு வங்கி கணக்குகளை தொடங்குவதற்கு IE Code அவசியமான ஒன்றாகும்.
இது போன்ற ஆவணங்களை தயார் செய்த பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வெளிநாட்டு வணிகத்திற்கான இயக்குநரகத்தில் பதிவு செய்து லைசன்ஸ் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அனுமதிகோரும் விண்ணப்பத்தில் நிறுவனத்தை பற்றி சில முக்கியமான விவரங்களை தர வேண்டும்.
மேலும் ஏற்றுமதி செய்பவர்களின் புகைப்படம், பான் கார்டு ஜெராக்ஸ் போன்றவற்றை அந்த விண்ணப்பத்தில் இணைக்கவேண்டும். லைசன்ஸ் அனுமதி கிடைத்ததும், சரியான முறையில் ஏற்றுமதி செய்து வரலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |