பேஸ்புக் என்பது சமூக வலைத்தளம் என்று அனைவருக்கும் தெரியும்.
இது ஒவ்வொரு நிமிடமும் தன்னை பரபரப்பாக வைத்து கொள்ளும். குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டி இருப்பார்கள்.
இந்த பேஸ்புக்கால் நட்பு – காதல் என்று புதிய உறவுளின் அறிமுகமும் கிடைக்கும்.
பேஸ்புக்கில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்-பெண்களும் நட்பு மலர்ந்து பிறகு காதல் ஏற்பட்டு, திருமணம் என்னும் இன்ப பெருவிழாவில் முடிந்த கதைகளும் உண்டு.
இதற்காகவே தற்போது பேஸ்புக் புதிய வடிவம் எடுத்து, தனிமையில் உள்ளவர்களை இணைக்க பெற்றோர்-நண்பன் இவர்களை தாண்டி சமூக இணையதளம் பொறுப்பை எடுத்துள்ளது.
பேஸ்புக்:
பேஸ்புக்குக்கு புதிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அதுவும் இளைஞர்கள் தான்.
இவற்றில் சரியான கருத்துக்களுக்கும் சரி, தவறான கருத்துக்களுக்கும் சரி பஞ்சமே ஏற்பட்டதில்லை.
அதேபோல் பல நாடுகளையும் தாண்டி எல்லையில்லா நட்புகளை கொண்டு வருகிறது.
எதிரி நாடாக இருந்தாலும், அங்கு காதலன், காதலி, நண்பன், தோழி என பலரையும் உருவாக்கி வருகிறது
இவற்றில் பெற்றோரையும் நண்பணையும் தாண்டிய இணையில்லா ஏற்ற தோழன் பேஸ்புக் ஆகும்.
இளைஞர் தலைமுறையினர்:
பேஸ்புக்கில் இன்றைய தலைமுறையினரின் கிசுகிசுக்கு அளவே இருக்காது.
விரும்பியவர்களுக்கு பேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் தூது விட்டு வந்தனர்.
ஆனால் அவர்களுக்கு வெளிப்படையாக சொல்லாமல் மவுனம் காப்பதும் உண்டு. சிங்கிளா இருந்தாலும் தன் காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்வாளா? மணம் செய்ய சம்மதம் தெரிவிப்பாளா? என்று தோன்றும். இதேபோலத்தான் பெண்களுக்கும்.
இனி கவலையை விடுங்க ஜீ:
காதலிக்க ஆசை இருந்தாலும் தனக்கு ஏற்ற ஜோடியை தேர்ந்தெடுக்க முடியவில்லையா?
காதல் தோல்வியினால் மன வேதனை அடைந்த ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி இன்று வரை சரியான தீர்வு கிடைக்க வில்லையா?
ஒரு நாளே அல்லது வாழ்நாள் முழுவதும் ஆசைப்பட்டவருடன் வாழ முடியவில்லை என்று ஆயிரம் ஏக்கங்கள் இருக்கலாம்.
இனி கவலையை விடுங்க ஜீ. இதுக்கு பேஸ்புக்கே தனி தீர்வு கொடுத்து இருக்கிறது. இதற்காகவே விரைவில் பேஸ்புக்கில் தனியாக டேட்டிங் என்று தனி ஆப்சன் வரவிருக்கிறது.
தனியா அலஞ்சி திரின்ச பறவைக்கு ஜோடி சிக்கிடுகிச்சு:
தனியாக அலஞ்சி திரிந்தவர்களுக்கு ஜோடி பேஸ்புக்கில் கிடைச்சிருச்சு என்று சொல்லி ஹாயா வலம் வரும் காலமும் விரைவில் வர இருக்கிறது. இதற்காக பேஸ்புக் பல்வேறு சோதனை ஓட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. விரைவில் டேட்டிங் என்று ஆப்சன் வரும் வாழ்நாள் துணையும் தேர்வு செய்யலாம் அல்லது சில நாள் என்ஜாய் மெண்ட் வாழ்கையும் வாழலாம்.
200 மில்லியன் கிங்கிள்ஸ்:
பேஸ்புக் பக்கத்தில் தற்போது வரை 200 மில்லியன் சிங்கிள்ஸ் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் மார்க் ஸூக்கர்பெர்.
இதற்காகவே பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர் தற்போது, தாங்கள் விரும்பிய படி டேட்டிங் செய்யும் வசதியை உருவாக்கியுள்ளார்.
எப்8 மாநாட்டில் அறிவிப்பு:
தனி ஆணுக்கும், தனி பெண்ணுக்கும் இனி கவலை வேண்டாம்.
டேட்டிங் செய்யும் வசதியை விரைவில் பேஸ்புக்கில் வரவிருக்கிறது இதற்காகவே தற்போது, சோதனை முறையில் தனது ஊழியர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் நிறைகுறைகளை களைந்து விரைவில் ஊழியர்கள் தெரிவிப்பார்கள். பிறகு அனைவருக்கும் பரவலாக சேவையாக அறிக்கப்படும் என்று எப்8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனர் மார்க் அறிவித்துள்ளார். இதனால் உலக முழுவதும் இருக்கும் சிங்கிள்ஸ்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.