இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

Advertisement

இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

ஹவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய மேட் 20 ஸ்மார்ட்போனில் போன் சார்ஜை பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 16 அன்று நடந்த வெளியீட்டு விழாவில் ஹவாய் நிறுவனம், தனது அடுத்த படைப்பான “மேட் 20” ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

மக்களை வெகுவாக கவரக்கூடிய பல அம்சங்கள் அந்த போனில் இருந்தாலும், விழாவில் பெரிதும் பேசப்பட்டது அதன் ரிவர்சிபில் சார்ஜிங் (Reversible Charging) தொழிற்நுட்பம் தான்.

இந்த தொழிற்நுட்பத்தை கொண்டு ஒயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) அம்சம் கொண்ட போன்களை இந்த மேட் 20 போனின் பின்புறம் வைத்து, சார்ஜை பகிர்ந்து கொள்ளலாம்.

எப்படி இது சாத்தியப்படும், இந்த கேள்விக்கான பதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஒயர்லெஸ் சார்ஜிங் பேடு (wireless charging pad) தொழிற்நுட்பத்தில் துவங்குகிறது.

இந்த ஒயர்லெஸ் சார்ஜிங் பேடு என்பது ஒயர் இல்லாமல் போனை சார்ஜ் செய்ய உபயோகப்படும் ஒரு தட்டு. இந்த தட்டின் உள்ளே ஒரு காயில் (coil) பொருத்தப்பட்டிருக்கும். இந்த சார்ஜ் செய்யும் தட்டுக்கு மின்சாரம் வழங்கினால் அந்த காயில் வழியாக வெளிவரும் கதிர்கள் போனை சார்ஜ் செய்துவிடும்.

இந்த சார்ஜிங் தட்டு அதிகம் பிரபலம் இல்லாத காலகட்டத்தில், ஐகிஏ ஒயர்லெஸ் சார்ஜிங் பர்நிச்சர் (IKEA wireless charging furniture) நிறுவனம் ஒரு புதிய மின்விளக்கை அறிமுகப்படுத்தியது.

முன்னர் கூறப்பட்ட சார்ஜிங் தட்டை இந்த விளக்குடன் இணைப்பது மூலம் போனை சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் அந்த விளக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இப்படியாக ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட போன்களை சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி எஸ் 6, எஸ் 6 எட்ஜ் மற்றும் கேலக்ஸி நோட் 5 போன் மாடல்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இவ்வாறு இயங்கும் இந்த சார்ஜிங் தட்டு, எந்த தொழிற்நுட்பம் கொண்டு இயங்குகிறதோ அதே தொழிற்நுட்பத்தை தனது போனில் சேர்த்துள்ளது ஹவாய் நிறுவனம்.

இதனால் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட போனை இதன் பின்னால் வைத்தால் அதனுடன் சார்ஜை பகிர்ந்துகொள்ளும்.

ஹவாய் அறிமுகப்படுத்தும் இந்த வசதியை கூடியே சீக்கிரம் மற்ற பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement