BSNL-லின் அதிரடி திட்டம் ..!
தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டிகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் BSNL நிறுவனம் புதிதாக விங்ஸ் என்னும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவை குறிப்பாக அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக BSNL நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்துள்ளது என்பன குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தற்சமயம் அறிமுகம் செய்துள்ள விங்ஸ் என்னும் புதிய சேவையில் ஆண்டு முழுவதும் அன்லிமிட்டெட் ஆடியோ, வீடியோ கால் வழங்கப்படுகிறது.
இனிமேல் மின்சாரத்தை தொட்டால் ‘ஷாக்’ அடிக்காது ஏன் தெரியுமா?
டிராய்:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிராய் வழங்கிய பரிந்துறையை ஏற்கும் வகையிலும், பின்பு இன்டர்நெட் டெலிஃபோன் சேவையை வழங்குவதற்கு டெலிகாம் துறையில் ஒப்புதல் வாங்கிருந்தது என்பது குறிப்பிடதக்கது.
செயலி:
IMS NGN கோர் ஸ்விட்ச்களின் ஐபி-சார்ந்த அக்சஸ் நெட்வொர்க் வழங்கும் மொபைல் நம்பரிங், கொண்டு இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது.
குறிப்பாக பயனிகள் இதைப் பயன்படுத்த SIP க்ளையன்ட் (சாஃப்ட் செயலி) ஒன்றை தங்களது ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேண்ட்லைன்:
இந்த செயலி SIP போன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ளவும், பெறவும் வழி செய்கிறது, பின்னர் இதை மொபைல் போன் அல்லது லேண்ட்லைன் மொபைல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
விங்ஸ்:
வாடிக்கையாளர்களுக்கு IMS கோர் மற்றும் IP நெட்வொர்க்-ஐ பயன்படுத்தி வாய்ஸ் சேவையை BSNL WINGS விங்ஸ் மூலம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அன்லிமிட்டெட் ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதியை ஒரு முறை ஆக்டிவேஷன் கட்டணமாக ரூ.1099-கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 1
தற்சமயம் இந்த புதிய சேவைகளுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன, மேலும் ஆகஸ்ட் 1-முதல் இந்த சேவை துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் BSNL நிறுவனம் ரூ.491-திட்டத்தில் தினசரி 20ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தள்ளது, குறிப்பாக ஏர்டெல் ஜியோவிற்கு போட்டியா இந்த திட்டம் வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.