ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்கள் (airtel plans):
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மற்றம் சலுகைகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. அதுவும் குறிப்பாக இந்திய தொலை தொடர்பு சந்தையில் அதிவேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டியை சமாளிப்பதற்காக தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது புதிய ரீசார்ஜ் திட்டங்களை (airtel plans) அறிமுகம் செய்துள்ளது.
அதுவும் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்களில் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சரிவருங்கள் அவற்றில் அப்படி என்ன திட்டங்கள் இடம் பெற்றுள்ளது என்று இவற்றில் நாம் காண்போம்.
ஏர்டெல்லின் புதிய திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் புதிதாக அறிவித்திருக்கும் திட்டம் என்னவென்றால் ரூ.398-க்கு ரீசார்ஜ் திட்டத்தை (airtel plans) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 SMS சலுகைகள் கிடைக்கும்.
இந்த புதிய திட்டமானது ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சலுகை:
ஏர்டெல்லின் 398 ரூபாய் பிளானில் 1.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலும் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு நாளைக்கு 90 இலவச எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லில் ஏற்கனவே இருக்கும் ரூ.399க்கான பிளான் ரூ.398 போன்று பலன் தரக்கூடியதாக இல்லை.
ரூ.399 பிளானில் ஒரு நாளைக்கு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இலவச 100 எஸ்.எம்.எஸ் செய்து கொள்ளலாம்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல், குறிப்பு மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.