ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை மற்றும் அதன் அம்சங்கள்..! Apple Watch Series 4 Review..!
iPhone XS, iPhone XS Max, iPhone XR, வரிசையில் தற்போது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 வெளியாகி இருக்கிறது. ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்சுகள் கடந்த 2015-ல் இருந்துதான் வெளிவரத் தொடங்கின. அது முதற்கொண்டு வெளிவந்த ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த சீரிஸ்4 மிகச்சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
சரி வாங்க இந்த மிகசிறந்த அம்சமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 (Apple Watch Series 4 Review) பற்றிய முழு விவரங்கள் அதாவது அதன் சிறப்பு அம்சம், அதன் விலை போன்றவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.
இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி? |
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:-
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 (Apple Watch Series 4 Review) முற்றிலும் புதிதாகவும் பெரிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மேம்படுத்தப்பட்ட நிறைய அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.
அதன்படி சிறப்பான அம்சம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது ஆப்பிள்-இன் புதிய எஸ் 4 சிப்செட் மற்றும் உடனடி இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதி ஆகும்.
TNEB Digital Meter Reading பார்ப்பது எப்படி? தெரிஞ்சிக்கலாம் வாங்க |
எட்ஜ்-டு-எட்ஜ் கர்வுட் டிஸ்ப்ளே:-
Apple Watch Series 4 Review – இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் எட்ஜ்-டு-எட்ஜ் கர்வுட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது முந்தைய மாடலை விட 30% பெரிய திரை வசதியைப் பயனருக்கு வழங்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 இன் யூசர் இன்டர்பேஸ், அதன் பெரிய திரையை முழுமையாகப் பயன்படுத்தும்படி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பயனர்கள் ஒரு முறை கேஸ்டர் செய்தால் போதும் வாட்ச்பேஸ் சேர்க்கலாம்.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 திரையில் பங்கு சந்தை விவரம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் டிஸ்பிலே-இல் காட்டப்படுகிறது.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? |
சிறப்பான சேவை:-
Apple Watch Series 4 Review – இம்முறை இந்த ஸ்மார்ட் வாட்ச் இல் டிஜிட்டல் கிரவுனில் ஹாப்டிக் பீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்பீக்கர் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி டாக்கி உள்படப் பல சேவைகளைப் பயனர்கள் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் கிரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 விலை:-
Apple Watch Series 4 Review – இந்த ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4, ஜிபிஎஸ் இன் விலை 399 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,686/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் செல்லுலார் பிளஸ் ஜிபிஎஸ் வேரியன்ட் இன் விலை 499 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.35,875/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி? |
முன்பதிவு:-
Apple Watch Series 4 Review – ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 இன் முன்பதிவு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது, இதன் விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி துவங்குமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |