RAM -மிற்கும் ROM -மிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன..?

Advertisement

ரேம் மற்றும் ரோமிற்கும் இடையே உள்ள வித்தியாசம்..! | Difference Between Ram And Rom in Tamil

Ram மற்றும் Rom என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நீங்கள் போன் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவதற்கு போனால் ரேம் எவ்வளவு இருக்கிறது ரோம் எவ்வளவு இருக்கிறது என்றுதான் பார்த்து வாங்குவீர்கள். இவை இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. Ram மற்றும் Rom என்ற வார்த்தையை அதிகமான இடத்தில் கேட்டு இருந்தாலும் அதற்கான வித்தியாசம் என்னவென்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. பொதுவாக சொல்ல போனால் இப்பொழுது வரும் அனைத்து Smart Gadget- களிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓகே வாருங்கள் இவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

RAM மற்றும் ROM விளக்கம்:

RAM என்றால் என்ன..?

five difference between ram and rom in tamil

 RAM என்பதின் விரிவாக்கம் Random Access Memory ஆகும். இதை Volatile Memory என்று சொல்வார்கள். இது தற்காலிகமான டேட்டாவை சேமித்து வைக்கும் நினைவகம் ஆகும். இது Mother Board -லில் அமைக்கப்பட்டு இருக்கும். 

ஒரு கணினி அல்லது போன், இயங்கும் போது அதற்கு தேவையான டேட்டாவை RAM மெமரியில் சேமித்து வைத்து கொள்ளும். ஆனால் இது நிரந்தரமாக சேமித்து வைக்காது. கம்ப்யூட்டர் அல்லது போன் ஆஃப் செய்யப்பட்டால் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டேட்டா அழிந்து விடும். அதனால் தான் இதை Volatile மெமரி என்று அழைப்பார்கள்.

உங்கள் Pc-ல் Storage பிரச்சனை உள்ளதா அப்படினா இந்த Trick-யை ஒருமுறை செய்துபாருங்கள்..!

ROM என்றால் என்ன..?

what is ram and rom in tamil

 

 ROM என்பதன் விவரிவாக்கம் Read Only Memory ஆகும். இதை Non Volatile Memory என்று அழைப்பார்கள். இது டேட்டாவை நிரந்தரமாக சேமித்து வைக்கும் நினைவகம் ஆகும். 

இதில் சேமித்து வைக்கப்படும் டேட்டாக்கள், கணினி அல்லது போனை ஆஃப் செய்தாலும் அழியாமல் இருக்கும். அதனால் தான் இதை Non Volatile Memory என்று சொல்வார்கள். உதாரணமாக சொன்னால் நீங்கள் சேமித்து வைக்கும் வீடியோ, போட்டோ மற்றும் மியூசிக் போன்றவை இதில் தான் இருக்கும்.

ram and rom difference in mobile

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்கள் இந்த Settings எல்லாம் On-ல இருந்துச்சுன்னா அதை Off பண்ணி வச்சிருங்க..!

Difference Between Ram and Rom in Tamil

RAM-மிற்கும் ROM-மிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.

RAM  ROM 
இது டேட்டாவை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது. இது டேட்டாவை நிரந்தமாக சேமித்து வைக்கிறது.
சக்தி இல்லாமல் டேட்டாவை சேமிக்க முடியாது. சக்தி இல்லாமல் டேட்டாவை சேமிக்க முடியும்.
RAM -மில் டேட்டா எளிதில் சேமிக்க படுகிறது. ரோமில் டேட்டாவை சேமிக்க நேரம் எடுக்கும்.
இதில் டேட்டா, ப்ராசசர் (CPU) மூலம் அணுகப்படுகிறது. ரோம் டேட்டாவை, CPU அணுக முடியாது.
RAM 1 ஜிபி முதல் 256 ஜிபி வரை நினைவகத்தை கொண்டுள்ளது. ROM ஆனது வரம்பற்ற சேமிப்பு திறனை கொண்டுள்ளது. மேலும் இது தேவைக்கேற்ப மாறுபடும்.
ரேமின் செயலானது அதிக வேகத்தில் இருக்கும். இது ரேமை காட்டிலும் குறைவான வேகத்திலே இருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement