ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி?

Advertisement

ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி? (How to Apply Marriage Certificate Online in Tamilnadu)

திருமண பதிவு online:- திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் கட்டாய திருமண பதிவுச் சட்டம் 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009 சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

சரி இங்கு நாம் tnreginet.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…!

Passport online-யில் அப்ளை செய்வது எப்படி? (How to apply passport online in tamil)

ஆன்லைனில் திருமணம் பதிவு செய்வதற்கு முதலில் கணவர் மற்றும் மனைவி இவருடைய Address proof, Age proof & ID proof  மூன்றையும் ஸ்கேன் செய்து தயாராக வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு witness-வுடைய ஏதேனும் ஒரு ID-proof யின் எண்ணினை வாங்கி வைத்து கொள்ளவும்.

இப்பொழுது tnreginet.gov.in என்ற இணையதளம் மூலம் திருமணம் பதிவு எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம் வாங்க.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  thirumana pathivu online STEP: 1

முதலில் tnreginet.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அவற்றில் லாகின் ஐடியை கிரியேட் செய்து லாகின் செய்து கொள்ளவும்.

பின்பு பதிவு செய்தல் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவற்றில் திருமண பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நிறைய ஆப்ஷன்கள் காட்டப்படும். அவற்றில் எந்த திருமணத்தை பதிவு செய்யவேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளவும்.

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி?

உதாரணத்திற்கு இந்து திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்றால், இந்து திருமணம் பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளவும். இவற்றை தேர்வு செய்யும் போது விண்ணப்பத்தை உருவாக்குக என்பதை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு பதிவு திருமணம் செய்வது எப்படி?  STEP: 2

கிளிக் செய்தவுடன் சில information கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை முழுவதும் கவனமாக படித்த பின் கீழே பதிவு செய்தலுக்கு தொடர்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஆன்லைன் திருமணம் பதிவு செய்வது எப்படி?  STEP: 3

இப்பொழுது அடுத்த page திறக்கப்படும். அவற்றில் 4 பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது கணவரின் விவரம், மனைவியின் விவரம், சாட்சிகளின் விவரம் மற்றும் இதர விவரங்கள் என்று இருக்கும்.

அவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து அவர்களின் விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். பின் ஆதார் விவரங்கள் என்ற ஆப்ஷனில் ஸ்கேன் செய்து வைத்துள்ள கணவன் மற்றும் மனைவி இருவருடைய  address proof-ஐ update செய்ய வேண்டும்.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  STEP: 4

இந்த திருமண பதிவை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றை தாங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என்று இரண்டு முறையிலும் செலுத்தலாம். ஆன்லைன் முறை செலுத்த வேண்டும் என்றால் டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.

வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை எப்படி புதுப்பிப்பது..!

இப்பொழுது தாங்கள் பதிவு செய்த திருமண சான்றிதழ் pdf-ஆகா காட்டப்படும் அவற்றை டவுன்லோட் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இந்த படிவத்தில் கணவன், மனைவி மற்றும் சாட்சிகளின் கையொப்பத்தை இட்டு register office-க்கு இந்த படிவத்தை எடுத்து செல்ல வேண்டும்.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  STEP: 5

பின்பு திரும்பவும் home page-க்கு சென்று அவற்றில் திருமணம் பதிவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அவற்றில் விண்ணப்பத்தினை தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இவற்றை கிளிக் செய்தவுடன் நீங்கள் ஏற்கெனவே கிரியேட் செய்த documents இருக்கும். அவற்றை கிளிக் செய்து பின் அடையாளவில்லை செயல்பாட்டினை துவக்குக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  STEP: 6

இவற்றை கிளிக் செய்தவுடன் தாங்கள் எந்த register office-க்கு செல்ல போகிறீர்களோ அந்த அலுவலகத்தின் விவரம் மற்றும் தாங்கள் எந்த தேதிக்கு செல்ல போகிறீர்களோ அவற்றின் விவரத்தை உள்ளிட்ட வேண்டும். இப்பொழுது தங்களுக்கு appointment வழங்கப்படும்.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  STEP: 7

தாங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி இருந்தால் உங்களுக்கான payment receipt & appointment Sheet இரண்டும் வரும் அவற்றை தாங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு திருமண பதிவு செய்வது எப்படி?  STEP: 8

இந்த இரண்டு receipt-வுடன் தாங்கள் திருமணம் பதிவு செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்த படிவத்தையும் தங்களுக்கு வழங்கப்பட்ட appointment அன்று register office-க்கு எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வளவுதாங்க ஆன்லைன் மூலம் திருமணம் பதிவு செய்யும் முறை.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement