How To Cancel Train Ticket Online in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவு வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அதை தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய பிடிக்குமா..? யாருக்கு தான் ரயிலில் செல்ல பிடிக்காமல் போகும் சொல்லுங்கள். ரயில் பயணம் அவ்வளவு சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும். சரி இன்றைய நிலையில் பலரும் வேலைக்கு செல்ல ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 ரயில் பயணிகளே உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ் தெரிஞ்சிக்கிட்டா Useful -ஆ இருக்கும்
How To Cancel Train Ticket Online in Tamil:
வாசகர்களே அது என்ன குட் நியூஸ் என்று தெரிந்து கொண்டீர்களா..? சரி இரயில் டிக்கெட்டை ஆன்லைனில் Cancel செய்யும் வசதி கொண்டுவரபட்டுள்ளது என்று தெரிந்து கொண்டீர்கள். ஆனால் ட்ரெயின் டிக்கெட்டை ஆன்லைனில் எப்படி Cancel செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா..? அதற்கான பதிவு தான் இது. சரி வாங்க நண்பர்களே ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டை Cancel செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஸ்டேப் -1
முதலில் ட்ரெயின் டிக்கெட்டை Cancel செய்வதற்கு இந்தியன் ரயில்வே -யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதற்கு முதலில் Google Chrome ஆப் உள்ளே செல்ல வேண்டும். பின் அதில் Irctc என்று Type செய்து கொள்ளவும். பின் ஒரு திரை தோன்றும் அதில் மூன்றாவதாக Counter Ticket Cancellation என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
ஸ்டேப் -2
அடுத்து ஒரு திரை தோன்றும். அதில் PNR Number என்று ஒரு ஆப்சன் கொடுக்கட்டிருக்கும். அதில் உங்கள் ட்ரெயின் டிக்கெட்டின் இடது பக்கத்தில் PNR Number இருக்கும் அதை அந்த பாக்சில் கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் -3
அடுத்து Train Number என்று ஒரு பாக்ஸ் இருக்கும். அதில் உங்களுடைய ட்ரெயின் டிக்கெட்டில் PNR Number -ன் பக்கத்தில் இருக்கும் நம்பரை கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் -4
பின் Captcha என்ற பாக்சில் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களை அப்படியே கொடுக்க வேண்டும்.
ஸ்டேப் -5
அடுத்து கீழ் ஒரு குட்டி பாக்ஸ் போன்ற ஆப்சன் இருக்கும். அதில் டிக் செய்து Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்க ஆதார் கார்டு எப்போ எடுத்தீங்கனு தெரியுமா அதை உடனே Update செய்ய வேண்டுமாம் |
ஸ்டேப் -6
பின் நீங்கள் ட்ரெயின் டிக்கெட் வாங்கும் இடத்தில் கொடுத்த போன் நம்பருக்கு ஒரு OTP நம்பர் வரும். அதை OTP Number என்ற இடத்தில் கொடுத்து Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -7
அவ்வளவு தான் இப்பொழுது உங்களுடைய ட்ரெயின் டிக்கெட் ஆன்லைனில் Cancel ஆகிவிடும். பின் உங்களுக்கு போனில் எவ்வளவு பணம் திருப்பி கொடுப்பார்கள் என்ற தவழும் வந்துவிடும். பின் நீங்கள் உங்கள் Train டிக்கெட்டை ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டருக்கு சென்று பணத்தை திருப்பி வாங்கி கொள்ளலாம்.இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |