ரயில் பயணிகள் கவனத்திற்கு
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். இந்த ரயிலிலும் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளது. ஒன்று சாதாரண பிரிவு மற்றொன்று AC பிரிவு. என்ன தான் ரயில் பயணம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் கூட அதில் நிறைய விதிமுறைகள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து உள்ளது. அத்தகைய விதிமுறைகள் அனைத்தும் இதுநாள் வரையிலும் பின்பற்றப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ரயில் பயணிகள் பயன் பெறும் வகையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் தள்ளுபடி விகிதம் என்று நிறைய அம்சங்களை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்போது பயணிகளின் நலம் கருதி இப்போது வெயில் காலம் வந்துவிட்டது என்றும் புதிய அறிவிப்பை தென்னக ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு மற்றும் அதில் எப்படி பயன் அடைவது போன்ற முழு செய்தியினையும் இன்றைய பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க..
ரயில்வே பயணிகள்:
ரயில் என்பது ஒரு வார்த்தையாக இருந்தாலும் கூட அதில் நிறைய வகைகள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு ரயிலின் நேரம் என்பது ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
அத்தகைய நேரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு அந்தந்த பயணிகள் பயன் அடைகிறார்கள். அதுபோல ரயிலில் இரண்டு வகையான பிரிவுகள் இருப்பதால் பயணிகள் அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணம் செய்கின்றனர்.
அதுவும் குறிப்பாக இப்போது கோடை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் AC பிரிவினை தான் தேர்வு செய்து மகிழ்ச்சியாக பயணம் செய்கின்றனர். ஆகையால் தென்னக ரயில்வே நிலையமானது பயணிகளின் நலன் கருதி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
அது என்னவென்றால் செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டு AC 3 அடுக்கு பிரிவுகளில் எகானமி என்ற பிரிவு புதிதாக கொண்டுவரப்பட்டு அதற்கு குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த திட்டமும் இடையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மீண்டும் நடைமுறையாக்கு கொண்டுவர உள்ளதாக ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது.
ஆகவே AC 3 அடுக்கு பிரிவுகளின் கட்டணத்தை விட 8 சதவீதம் குறைவாக எகானமி பிரிவிற்கு வசூலிக்கப்படும் என்றும் படிக்கை விரிப்புகளும் வழங்கப்படும் என்றும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தென்னக ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது. இப்போது கோடை காலம் இருப்பதால் பயணிகள் இந்த செய்தியினை கேட்டு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்⇒ அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |