வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

Updated On: November 13, 2021 7:56 AM
Follow Us:
தொழில்நுட்ப செய்திகள்
---Advertisement---
Advertisement

தொழில்நுட்ப செய்திகள் – QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

தொழில்நுட்ப செய்திகள் – வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தாங்கள் வைஃ பை நெட்வொர்க்கினை மற்றவர்களுக்கு வழங்குபவரா நீங்கள், அப்படி என்றால் தங்களுக்கான பதிவுதான் இது. அதாவது வைஃபை பாஸ்வேர்டு இல்லாமல், QR Code மூலமாக வைஃபை இணைப்பை பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

சுழல் கேமராவுடன் இந்தியாவுக்கு வரும் Asus 6Z ஸ்மார்ட்போன்!

 

அதாவது பாஸ்வேர்டு சொல்லாமலே வைஃ பை இணைப்பினை கொடுப்பதற்கு மாற்று வலிகள் நிறைய உள்ளது அவற்றில் ஒன்று தான் இந்த QR Code கனெக்ட் செய்வது.

அதாவது வைஃபை மூலமாக www.qrstuff.com மற்றும் www.zxing.appsopot.com/generator ஆகிய இணையதளங்கள் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக வைஃபை இணைப்பை மற்றவர்களுக்கு வழங்கும் வசதியை நமக்கு அளிக்கிறது.

இதில் சென்று உங்கள் பாஸ்வேர்டை க்யூ.ஆர் கோடாக மாறிக்கொள்ளலாம். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுவற்றில் ஆங்காங்கு ஒட்டிக் கொள்ளலாம். வைஃபை தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்தாலே போதும். வைஃபை ஆட்டோமெட்டிக்காக கனெக்ட் ஆகி விடும்.

விசிறியே இல்லாத மின்விசிறி! குறைந்த விலையில் Bladeless Fan!!!

தொழில்நுட்ப செய்திகள் – QR Code பெறுவது எப்படி?

Step 1: www.qrstuff.com அல்லது www.zxing.appsopot.com/generator எதாவது ஒரு இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
Step 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் SSID பகுதியில், உங்கள் வைஃபை பெயரை பதிவு செய்யவும்.
Step 3: பாஸ்வேர்டு கேட்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை பதிவு செய்யவும்.
Step 4: இப்போது நெட்வொர்க் டைப் என்ற செக்ஷனில், WPA என்பதை கொடுக்கவும். வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் WPA என்று தான் இருக்கும்
Step 5: அவ்வளவு தான். இப்போது ‘க்யூ ஆர்’ கோடு ரெடி.

இனி கவலை வேண்டாம் வைஃபை வேண்டுமென்றால், இந்த கோடு ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டு இயங்குதளங்களிலும் இது வேலை செய்யும். ஐபோன் வைத்திருப்பவர்கள், கேமராவை பயன்படுத்தி க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யலாம்.

ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now