How to Open Paytm Account in Tamil
பொதுவாக அனைவருமே Google pay, Phone Pay போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். அதேபோல் Paytm-ம் ஒரு UPI Money Transfer App தான். Google pay, Phone Pay-ஐ விட Paytm App சிறந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் அதிகமாக இந்த Paytm App-ஐ பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆக இந்த Paytm App-ஐ எப்படி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக Paytm Account எப்படி Open செய்வது போன்ற தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Paytm Account Open செய்வது எப்படி? | How to Open Paytm Account in Tamil
ஸ்டேப்: 1
முதலில் Play Store-யில் Paytm app-ஐ Install செய்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு அந்த App-ஐ Open செய்து உங்கள் வங்கி கணக்கில் கொடுத்த தொலைபேசி எண் அல்லது ஆதார் அட்டையில் கொடுத்த தொலைபேசி எண்ணை உள்ளிட்டு Proceed Securely என்பதை கிளிக் செய்யவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Instagram யூஸ் பண்றீங்களா..! அப்போ இந்த Tricks-ஐ தெரிஞ்சுக்கோங்க புதுசா இருக்கும் ..!
ஸ்டேப்: 3
Proceed Securely என்பதை கிளிக் செய்த பிறகு Verifying Mobile Number என்று வரும். உங்கள் மொபைல் எண் Verify ஆன பிறகு, மற்றொரு பக்கம் திறக்கப்படும்.
ஸ்டேப்: 4
இப்பொழுது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பக்கம் திறக்கப்படும் அதில் Link Bank Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 5
பின் இன்னொரு பக்கம் திறக்கப்படும் அதில் Add Bank Account என்று இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 6
Add Bank Account என்பதை கிளிக் செய்த பிறகு இன்னொரு பக்கம் திறக்கப்படும். அவற்றில் உங்கள் Bank எதுவோ அதனை Select செய்துகொள்ளவும்.
ஸ்டேப்: 7
பின் மற்றொரு பேஜ் திறக்கப்படும் அதில் உங்கள் டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்கு எண்களை உள்ளிட வேண்டும். பின் அந்த கார்டின் Expiry Validity Date-ஐ உள்ளிட வேண்டும். இவை இரண்டையும் உள்ளிட்ட பிறகு Proceed ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 8
Proceed என்பதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP send ஆகும். OTP Verify ஆனபிறகு டிக் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 9
இப்பொழுது உங்களுடைய 4 டிஜிட் எண்ணை செட் செய்ய சொல்லி கேட்கும். உங்களுக்கு விருப்பம் போல் 4 டிஜிட் எண்களை செட் செய்து OK என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்: 10
அவ்வளவு தான் உங்களுக்கான Account இப்பொழுது கிரியேட் ஆகிவிட்டது. இந்த Paytm Account-ஐ பயன்படுத்தியும் நீங்கள் அனைவருக்கும் Money Transfer செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாட்சப் Use பண்ணா மட்டும் பத்தாது அதுல இப்படி ஒரு Tricks இருப்பதையும் தெரிஞ்சிக்கணும்…!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |