டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி?

How to Recover Deleted Photos in Mobile Tamil

டெலிட் ஆன போட்டோவை எடுப்பது எப்படி? | How to Recover Deleted Photos From Android Phone in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. நம்ம மொபைல் போனில் நிறைய போடோ வைத்திருப்போம். குறிப்பாக நமது தாத்தா பாட்டியின் போட்டோஸ், நமது நண்பர்களின் போட்டோஸ், உறவினர்களின் புகைப்படம், நாம் சிறிய வயதில் எடுத்து போட்டோஸ் என்று நிறைய போட்டோசை ஞாபகமாக வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த போட்டோசை கைதவறுதலாக அல்லது ஏதோ ஒரு கோபத்தினால் டெலிட் செய்து இருப்போம். பின் சில நாட்கள் கழித்து அந்த போட்டோசை பார்க்க வேண்டும் என்று நினைப்போம். இதற்காக நமது நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ Recover செய்து Deleted ஆன போட்டோசை எடுக்க முடியும் என்று கேட்டோம். அல்லது யூடுயூப்பில் ஏதாவது வீடியோக்களை பார்ப்போம் அப்படி பார்க்கும் போது அந்த வீடியோவில் சில ஐடியாக்களை வழங்கினாலும் அவர்கள் சில App டவுன்லோடு செய்ய வேண்டும் என்பார்கள். இது மாதிரி ஆப்ஸ் டவுன்லோடு செய்தோம் என்றால் நமது மொபைலில் வாரண்டி போய்விடும். அப்பறம் எப்படித்தான் Recover செய்து Deleted ஆன போட்டோசை எடுக்க முடியும் கேள்வியை கேட்பீர்கள்.

உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த பதிவில் எந்த ஒரு ஆப்ஸ் அல்லது Software பயன்படுத்தாமல் உங்கள் மொபைலில் எப்படி டெலிட் ஆன போட்டோசை எடுக்கமுடியும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க நமது மொபைலில் டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி? என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

டெலிட் ஆன போட்டோ எடுப்பது எப்படி? | How to Recover Deleted Photos in Mobile Tamil

ஸ்டேப்: 1

உங்களோட மொபைலில் செட்டிங்சில் ஒரே ஒரு ஆப்ஷனை எனேபுல் செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் இதுவரை நீங்கள் தவறுதலாகவே அல்லது கோவத்துடனோ டெலிட் செய்த அதனை போட்டோசையும் எடுக்க முடியும் அது என்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

ஸ்டேப்: 2

உங்கள் மொபைல் போனை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் File Manager-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

பின் அவற்றில் Setting என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 4

பின் அவற்றில் Show hidden files என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதனை எனேபிள் அதாவது On செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

பின்பு அவற்றில் இருந்து வெளியே வாருங்கள். இப்பொழுது File Manager-யில் இன்னும் நிறைய files இருக்கும். அவற்றில் நீங்கள் DCIM என்பதை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்: 6

DCIM என்பதை நீங்கள் கிளிக் செய்த பின்பு அவகற்றில் .thumbnails என்ற ஒரு ஆப்சன் இருக்கும்.

ஸ்டேப்: 7

.thumbnails என்பதை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால் நீங்கள் இதுவரை உங்கள் மொபைல் போனில் டெலிட் செய்த போட்டோக்கள் அனைத்தும் இருக்கும். அவ்ளோதாங்க Process இதை நீங்கள் ட்ரை செய்தலே போதும் மிக எளிதாக டெலிட் செய்த போட்டோசை எடுத்துவிடலாம்.

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி தெரியுமா?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil