யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி தெரியுமா?

How to Start Youtube Channel in Tamil

யூடியூப் சேனல் தொடங்குவது எப்படி? | How to Start Youtube Channel in Tamil

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது யூடியூப் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றி தான். இருப்பினும் யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் முதலில் நாம் யூடியூப் சேனல் நமக்கென்று தனியாக ஓபன் செய்ய வேண்டும். ஆக யூடியூப் சேனல் ஓபன் செய்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம்  தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

யூடியூப்:

கூகுளுக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படும் தலமாக இருப்பது யூடியூப் என்று சொல்லலாம். ஏனென்றால் யூடியூபில் நாம் ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துகொள்வது என்பது மிகவும் எளிமையாக இருக்கும். அதாவது நாம் யூடியூபில் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது, அதற்கு நிகராக நாம் காணொளி மூலமாக மிக எளிமையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை தெரிந்துகொள்ள முடியும். இதன் காரணமாக தான் கூகுளுக்கு அடுத்ததாக யூடுயூப் இடம் பெற்றுள்ளது. சரி வாங்க புதிதாக யூடுயூப் சேனல் தொடங்கலாம் என்பதை பார்ப்போம்.

யூடியூப் சேனல் ஓபன் செய்வது எப்படி? | How to Start Youtube Channel in Tamil

முதலில் உங்கள் மொபைல் அல்லது கணினி அல்லது லேப்டாப் எதையாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் உங்களிடம் ஏற்கனேவே Gmail ID இருக்கிறது என்றால் அதனை வைத்துகூட யூடுயூப் சேனலை ஓபன் செய்ய முடியும். இல்ல நீங்கள் உங்கள் யூடுயூப் சேனலுக்கென்று தனியாக Gmail ID ஓபன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால். புதிதாக ஒரு Gmail ID-ஐ கிரியேட் செய்துகொள்ளுங்கள்.

பிறகு யூடுயூப் App-ஐ ஓபன் செயுங்கள், அவற்றில் உங்கள் Profile-ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் Profile-ஐ கிளிக் செய்தவுடன் Your Channel என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.

Your Channel என்பதை கிளிக் செய்தவுடன், வேறொரு பக்கம் திறக்கப்படும் அவற்றில் உங்கள் சேனலுக்கு வேறு ஏதாவது பெயர் வைக்க வேண்டும் என்றால் பெயரை மாற்றி கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் Gmail ID-க்கு என்ன பெயர் வைத்தீர்களோ அந்த பெயரையே வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு Create Channel என்பதை கிளிக் செய்து உங்களுக்கான புதிய சேனலை கிரியேட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிரண்ட்ஸ் யூடுயூப் சேனல் புதிதாக ஓபன் செய்வதற்கான process, வேறொரு பதிவில் யூடுயூப் வீடியோ எப்படி அப்லோடு செய்வது என்பதை பற்றி பதிவு செய்கிறோம். இந்த பதிவை முழுமையாக படித்ததும் நன்றி..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil