தொழில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..!

Advertisement

சிம் கார்டும் வேண்டாம், இன்டெர்நெட்டும் வேண்டாம்.. ஒப்போவின் புதிய போன் (Oppo Phone New)..

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

இனி சிம் கார்டு இல்லாமலும் பேசலாம், இன்டெர்நெட் இல்லாமலும் மெசேஜ் அனுப்பலாம். அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீங்களா?

சாத்தியம் தாங்க.. ஆம் ஒப்போ நிறுவனம் புதிய (Oppo Phone New) தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கி டாக்கியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்த நெட்வொர்க்கும் இல்லாமல் பேச முடியும்.

QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றாக ஒப்போ திகழ்வது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மற்ற எலக்ட்ரானிக்ஸ் ஜாம்பவான்களான சாம்சங், எம்ஐ ஆகியவற்றுக்குப் போட்டியாக, தனக்கென்று பிரத்யேகமான புது புது தயாரிப்புகளை தயாரித்து கொண்டே ஒப்போ நிறுவனம் வருகிறது.

வாக்கி டாக்கி (Oppo Phone New):

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..! – அந்த வகையில், தற்போது ஒப்போ நிறுவனம் பிரத்யேகமாக வாக்கி டாக்கி ஒன்றை தயாரித்துள்ளது.

இதன் மூலம் 3 கிலோமீட்டர் தொலைவுக்குள் ப்ளூடூத், வைஃபை போன்ற நெட்வொர்க் எதுவும் இல்லாமல் எந்த இடையூறு இல்லாமல் பேசவும், எஸ்.எம்.எஸ் அனுப்பவும் முடியும்.

அண்மையில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் கூட்டமைப்பில் ஒப்போ நிறுவனம், அண்டர் ஸ்கிரின் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது.

அப்போது தான் இப்படியான ஒரு வாக்கி டாக்கி தயாரித்து வருவதாக ஒப்போ நிறுவனம் வெளி உலகுக்கு தெரிவித்தது.

ஆனால், இந்த வாக்கி டாக்கி எந்த தொழில்நுட்பத்தில் இயங்குகிறது, இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை ஒப்போ நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும், எப்போது இந்த கேட்ஜெட் விற்பனைக்கு வரும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News) – இவற்றின் சிறப்பு அம்சங்கள்:

ஒப்போவின் இந்த வாக்கி டாக்கி மூலம் எஸ்.எம்.எஸ், வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ்கால் ஆகியவை செய்ய முடியும். மேலும், இரண்டுக்கு மேற்பட்ட வாக்கி டாக்கி இருந்தால், அவற்றின் மூலம் Group Chats போன்றவையும் செய்ய முடியும். பேரிடர் போன்ற காலங்களில் இந்த வாக்கி டாக்கி மிகபயனுள்ளதாக இருக்கும்.

ஸ்மார்ட்போனில் இனி இந்த குழப்பம் இருக்காது கூகுள் அறிவிப்பு..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement