SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி?

Advertisement

எஸ்பிஐ ஏடிஎம் கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி? | SBI ATM Pin Change Online in Tamil

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாகப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது தங்களது தொலைந்து போன ஏடிஎம் கார்டை ஆன்லைன் மூலமாகவே Block செய்ய முடியும். அதேபோல, புதிய ஏடிஎம் கார்டுக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும். மேலும் தங்களது SBI ATM கார்டு PIN நம்பரை மாற்றம் செய்யவும் முடியும். சரி வாங்க இந்த பதிவில் வீட்டில் இருந்தபடியே தங்களது SBI ATM கார்டு PIN நம்பரை மாற்றுவது எப்படி என்பதை பற்றி படித்தறியலாம்.

SBI ATM கார்டு PIN நம்பர் மாற்றுவது எப்படி? | SBI ATM Pin Generation Online Tamil

SMS மூலம் SBI ATM கார்டு PIN நம்பர் மாற்ற வழிமுறை:

ஏடிஎம் PIN நம்பரை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் SMS பாக்ஸை ஓப்பன் செய்து 567676 என்ற நம்பருக்கு PIN ABCD EFGH என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

இதில் ABCD என்பது உங்களது ஏடிஎம் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்கள்.

EFGH என்பது உங்களது அக்கவுண்ட் நம்பரில் உள்ள கடைசி நான்கு இலக்க எண்கள்.

எஸ் எம் எஸ் அனுப்பியவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

இந்த ஓடிபி எண் 24 மணி நேரங்களுக்கு ஆக்டிவாக இருக்கும்.

அதன் பின்னர் அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்குச் சென்று அதில் PIN மாற்றும் வசதியைத் தேர்ந்தெடுத்து ஓடிபி எண்ணைப் பதிவிட்டால் புதிய PIN நம்பர் மாறிவிடும்.

ஐவிஆர் அழைப்பு மூலம் SBI ATM கார்டு PIN நம்பர் மாற்ற வழிமுறை:

ஐவிஆர் அழைப்பு மூலமாகவும் நீங்கள் PIN நம்பரை மாற்ற முடியும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 18004253800 அல்லது 1800112211 என்ற எண்களுக்கு போன் செய்து உங்களது 16 இலக்க ஏடிஎம் கார்டு நம்பரைப் பதிவிட வேண்டும்.

உடனடியாக உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும் அதைப் பதிவிட்டால் உங்களால் PIN நம்பரை மாற்ற முடியும்.

ஆன்லைனில் எப்படி ஆதார் நம்பரை தெரிந்து கொள்வது?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement