இனி துணி மடிக்க கஷ்டப்பட வேண்டாம் துணிகளை அழகாக மடித்து வைக்கும் ரோபோ

Advertisement

துணிகளை அழகாக மடித்து வைக்கும் ரோபோ

அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளே சேர்ந்த விஞ்ஞானிகள் மக்களுக்கு பயன்படும் விதத்தில் விதவிதமான ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.. மனிதர்களுக்கு உதவி வகையில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்துடன் இத்தகைய ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. துணி வித்துவைக்கும் நேரத்தை குறைக்க வாஷிங் மெஷின் தயாரிக்கப்பட்டது. துவைத்த துணிகளை உலர வைக்க பின்பு டிரையரும் உருவாக்கப்பட்டது. தற்சமயம் உலர்ந்த துணிகளை அழகாக மடித்துவைக்க புதிய வகையான ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

துணி மடிக்கும் ரோபோ:

அமெரிக்காவின் California-Berkeley பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிநவீன ரோபோவை வடிவமைப்பட்டுள்ளனர் இதன் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம் வாங்க.

SpeedFolding என்ற பெயரில் இந்த ரோபோ அழைக்கப்படுகிறது.

இந்த ரோபோ ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 40 வரையிலான துணிகளை ஒழுங்காக மடித்து வைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு முன்பு இந்த ரோபோக்கள் ஒரு மணி நேரத்திற்கு 3 முதல் 6 எண்ணிக்கையிலான துணிகளை மட்டுமே மடிக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததாம்.

BiManual Manipulation Network எனப்படும் நரம்பியல் வலையமைப்பை பயன்படுத்தி துணிகளை அழகாக இந்த ரோபோ மடித்து வைக்கிறது.

இந்த ரோபோ வீட்டிற்கு பயன்படுப்போமோ இல்லோயோ கண்டிப்பாக துணிக்கடைகளுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement