வெறும் ரூ.10,000-க்கும் உலகின் முதல் 11ஜிபி ரேம் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Advertisement

Tecno Spark 9 Specifications in Tamil

ஹாங்காங்கை சேர்ந்த டெக்னோ நிறுவனகம் இந்தியாவில் தனது டெக்னோ ஸ்பார்க் 9 ஸ்மார்ட்போனை இன்று ஆறுமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தது. வெறும் ரூ.10,000 விலையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் உலகின் முதல் முறையாக 11ஜிபி வரை ரேம் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

டெக்னோ ஸ்பார்க் 9 விலை – Tecno Spark 9 Specifications in Tamil

ரூ.10,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 11ஜிபி வரை ரேம் மெமரியை நீட்டிக்க முடியும்.

இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 9 போனானது 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரியுடன் வெளியாகிறது.

5 ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவையும் இந்த போன் பெறுகிறது.

இன்ஃபினிட்டி பிளாக், ஸ்கை மிரர் ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

இந்த Tecno Spark 9 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அமேசான் பிரைம் டே சேல் சலுகை விற்பனை நாளில் இந்த போன் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே:

அம்சங்களை பொறுத்தவரை டெக்னோ ஸ்பார்க் 9-யில்  6.6 இன்ச் அளவிலான வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே இடம்பெறும். இது ஒரு HD+ பேனலாக இருக்கும். மேலும் இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு மற்றும் 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவையும் வழங்கும்.

குறிப்பாக மீடியாடெக் ஹீலியோ ஜி37 (MediaTek Helio G37 chipset) இந்த போனை இயக்கும்.

ஸ்பீக்கர்:

DTS தரத்தில் செறிவூட்டப்பட்ட ஸ்பீக்கர்களும் கூடுதல் பொழுதுபோக்கு அம்சத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா:

டெக்னோ ஸ்பார்க் 9 போனின் பின்பக்கம் இரண்டு கேமராக்கள் கொண்ட அமைப்பு எல்இடி பிளாஷுடன் இருக்கிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சாராகவும், கூடுதலாக் ஒரு 2 மெகாபிக்சல் சென்சாரும் நிறுவப்பட்டிருக்கும்.

செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமரா உள்ளது.

பேட்டரி:

போனில் 5000mAh திறன்கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை திறனூட்ட பாஸ்ட் சாஜ்ரிங் ஆதரவும் கிடைக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement