WhatsApp-க்கு மாற்றாக என்னென்ன செயலிகள் இருக்கிறது தெரியுமா?

Advertisement

Top 5 Alternative Apps For WhatsApp in Tamil

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. செல்போன் வந்த பிறகு நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உரையாடிய காலங்கள் மறைந்து, இப்போது அனைத்துமே செல்போனாக மாறிவிட்டது. நாம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஏதாவது மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது WhatsApp செயலி தான். என்ன தான் Play Store-யில் எக்கசக்கமான மெசேஜர் ஆப் இருந்தாலும். நாம் டவுன்லோடு செய்யும் ஆப் WhatsApp-ஆக தான் இருக்கும். ஆனால் வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக சில செயலிகளும் உள்ளது, அந்த செயலிகளை பற்றி தான் நாம் இன்று தெரிந்துகொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டெலிகிராம் (Telegram):Telegram

டெலிகிராம் செயலியும் WhatsApp செயலிக்கு மாற்றாக இருக்கும் பிரபலமான செயலியாக சிறந்து விளங்குகிறது. வாட்ஸ் அப் செயலியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் டெலிகிராமிலும் உள்ளது. நீங்கள் விரும்பினால் WhatsApp-யில் இருக்கும் Chat-ஐ, அப்படியே டெலிகிராமிற்கு மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால். அந்த மெசேஜை நீங்கள் Schedule செய்யும் வசதியும் டெலிகிராமில் உள்ளது.

சிக்னல் (Signal):Signal

அடுத்ததாக பார்க்க இருப்பது சிக்னல் ஆப் பற்றித்தான். தற்போது சிக்னல் செயலி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த செயலியில் Chat, Video Calls என்று  வாட்சப்பில் இருக்கும் அனைத்து ஆப்சன்களும் இந்த செயலியிலும் உள்ளன. இந்த செயலியும் வாட்சப் கொடுக்கும் end-to-end encryption ஆப்ஷனை பயனர்களுக்கு கொடுக்கிறது. குறிப்பாக இந்த செயலியில் Last seen எதுவும் இல்லை. இன்னும் பல வசதிகள் இந்த செயலியில் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Truecaller-ல் உங்கள் Data Save ஆகியுள்ளதா அதனை எவ்வாறு Delete செய்வது என்று உங்களுக்கு தெரியுமா..?

ஐ மெசேஜஸ் (iMessages):iMessages

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு சிறந்த செயலியாக இந்த ஐ மெசேஜ் செயலி உள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட்போன் பயனர்கள், இந்த செயலியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு இலவசமாக மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம். பயனர்கள் நம்பிக்கைக்கு உகந்த வகையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் இந்த செயலி கொண்டுள்ளது.

டிஸ்கார்டு (Discord): Discord

தொழில்நுட்ப காரணங்களால் வாட்சப் உள்ளிட்ட செயலிகள் பிரச்சனைகளை அவ்வப்போது சந்திக்கும். ஆக அப்போது  உடனடியாக இந்த டிஸ்கார்டு செயலியை பயன்படுத்தலாம். குரூப் அல்லது தனிநபர்களுடன் Chat  செய்ய சிறந்த செயலி.

மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams):Microsoft Teams

இந்த மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் நமது நெருங்கியவர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், நாம் நலமாக இருக்கிறோமா? என்பது குறித்த தகவல்களை உடனடியாக தெரியப்படுத்த உகந்தது. வாட்சப் செயலி முடங்கினால், அந்தநேரத்தில் உடனடியாக இந்த செயலிகளை பயன்படுத்தி, நாம் சொல்ல வரும் தகவல்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இந்த செயலி மூலம் தெரியப்படுத்தலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement