இப்படியெல்லாம் வாட்சப்பில் அப்டேட் வந்தா வாட்சப்பை விட்டு போக முடியாது போலயே.!

Advertisement

Whatsapp Message Edit Feature in Tamil

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்திக்கின்றனர். இந்த ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ் புக், இன்ஸ்டாகிராம், டெலெக்ராம் போலவே வாட்ஸப்பையும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த வாட்ஸப்பில் மெசேஜ், Voice call, video call போன்ற வசதிகள் உள்ளது. வாட்சப் பயனர்களை மகிழ்விக்கும் வகையில் பல அப்டேட்களை வழங்குகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் வாட்சப்பில் அனுப்புகின்ற மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை கொண்டு வர போகிறது. அதனை பற்றிய தகவலை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Whatsapp Message Edit Feature in Tamil:

வாட்சப் பயனாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில்  அனுப்பிய மெசேஜ் தவராக இருந்தால் டெலிட் செய்து தான் மறுபடியும் சென்ட் செய்வோம். ஆனால் இனிமேல் அனுப்பிய மெசேஜ் மூலமாக  எடிட் செய்து அப்படியே பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்குகிறது. இதனால் எடிட் செய்யப்பட்ட குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும் அதனைப் பெறுபவர் என இருவருக்கும் அப்டேட் ஆகிவிடும்.

வாட்சப்பில் இப்படியெல்லாம் அப்டேட் வந்தா என்ன பண்றது..

New Feature of Whatsapp Disappearing Messages:

மறைந்து வரும் செய்திகள் பகுதியையும் அப்டேட் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. புதிய புதுப்பித்தலுடன், மறைந்து போகும் செய்தி விருப்பத்திற்கு அமைக்க 15 புதிய கால அளவுகளை புதிதாக  சேர்க்க உள்ளது. தற்போது, ​​வாட்ஸ்அப் அதன் பயனர்கள் அனுப்பியவர் மற்றும் பெறுநர் இருவரின் அரட்டையிலிருந்து மறைந்து போகும் செய்திகளை தானாகவே அனுப்ப அனுமதிக்கிறது. 24 மணிநேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய மூன்று விருப்பங்களிலிருந்து செய்திகளை மறைப்பதற்கான கால அளவு இருந்தது.

மேலும் மெனுவின் கீழ் மறைந்து போகும் செய்திகளுக்கு 15 புதிய நேர கால விருப்பங்களை WhatsApp விரைவில் அமைக்க உள்ளது. புதிய புதுப்பிப்பு பயனர்கள் 1 வருடம், 180 நாட்கள், 60 நாட்கள், 30 நாட்கள், 21 நாட்கள், 14 நாட்கள், 6 நாட்கள், 5 நாட்கள், 4 நாட்கள், 3 நாட்கள், 2 நாட்கள், 12 மணி நேரம் போன்றவற்றில் இருந்து மறைந்து போகும் செய்திகளுக்கு டைமரை செட் செய்து பயன் பெறலாம்.

வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil

 

Advertisement