இனி எந்த ஒரு App இல்லாமல் Whatsapp Status ட்வுன்லோட் செய்யலாம்..!

whatsapp status download without app in tamil

உங்கள் நண்பரின் Whatsapp Status பிடித்திருக்கிறதா..! அதனை எளிதாக  ட்வுன்லோட் செய்ய சூப்பர் ட்ரிக்ஸ்…! How to Save Whatsapp status without any app..!

Whatsapp status download without app:- வணக்கம் நண்பர்களே..! இப்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸ்அப் செயலியினை கட்டாயம் பயன்படுத்துகின்றன. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அவர்களின் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தங்களின் குறுந்தகவல்களை மிக எளிதில் அனுப்புகின்றனர். மேலும் வாட்ஸ்அப் செயலியில் நாம் ஸ்டேட்டஸ் வைப்போம், அதேபோல் நம் நண்பர்களும் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். நம் நண்பர்கள் வைத்திருக்கும் ஒருசில ஸ்டேட்டஸ் நமக்கு மிகவும் பிடித்திருக்கும், இருந்தாலும் அவர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை எனக்கு சென்ட் பண்ணுங்கள் என்று நாம் கேட்போம் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சேவ் செய்யும் சிலவகையான அப்ளிகேஷனை நாம் பயன்படுத்தி அவர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை டவுன்லோட் செய்வோம்.

இனி WhatsApp-யில் உங்கள் நண்பர்கள் வைக்கும் Status-யில் உள்ள Photos & Videos-ஐ தங்கள் நண்பர்களிடம் ஸ்டேட்டஸை எனக்கு சென்ட் செய்யுங்கள் என்றோ அல்லது டவுன்லோடு செய்ய ஏதாவது அப்ளிகேஷனையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நம்மளுடைய ஸ்மார்ட்போனிலேயே உங்கள் நண்பர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் சேவ் செய்யப்பட்டிருக்கும். அதை நமது Whatsapp Status-ல் இரண்டே நிமிடத்தில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். அதை பற்றிய தகவல்களை இப்பொழுது நாம் இங்கு தமிழில் தெரிந்து கொள்வோம் வாங்க…

வாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..! 

Whatsapp status download without app:-

Step: 1

whatsapp status download without app

முதலில் தங்கள் ஸ்மார்ட்போனை (Smartphone) கையில் எடுத்து ON செய்யுங்கள். பின் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள File Manager-ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு அவற்றில் All Files என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

Step: 2

whatsapp status download without app

பின்பு Phone storage என்று இருக்கும் அவற்றில் WhatsApp என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step: 3

whatsapp status download without app

பின் Media என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step: 4

whatsapp status download without app

இப்பொழுது Search button-ஐ கிளிக் செய்து .Statuses என்று Type செய்யுங்கள். பின் .Statuses என்று வரும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

Step: 5

whatsapp status download without app

இப்பொழுது நீங்கள் யாருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை எல்லாம் பார்த்திருக்கிறீர்களோ அவர்களுடைய ஸ்டேட்டஸ்(Status) list அனைத்தும் இந்த Folder-ல் இருக்கும்.

அவற்றில் யாருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தங்களுக்கு வேண்டுமோ அவற்றை கிளிக் செய்யுங்கள்.

Step: 6

whatsapp status download without app

இப்பொழுது Open With Photos என்று வரும் அவற்றில் சில ஆப்ஷன்கள் இருக்கும் அவற்றில் Photos என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது யாருடைய ஸ்டேட்டஸை கிளிக் செய்திர்களோ அவர்களுடைய ஸ்டேட்டஸ் ஓபன் ஆகும்.

Step: 7

whatsapp status download without appபின் share button-ஐ கிளிக் செய்ய வேண்டும். அவற்றில் சில ஆப்ஷன்கள் இருக்கும் அதில் WhatsApp என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களுடைய வாட்ஸ்அப் ஓபன் ஆகும், அவற்றில் My Status கிளிக் செய்து சென்ட் Aero mark-ஐ கிளிக் செய்யுங்கள்.

இந்த ட்ரிக்ஸை செய்வதற்கு இரண்டு நிமிடங்கள் கூட செலவாகாது. அதேபோல் தேவையல்லாமல் Whatsapp status download செய்வதற்கு இனி எந்தவித ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News