300 ரூபாய்க்கு DSLR Camera மற்றும் 2000 ரூபாய்க்கு Smartphone வாங்கலாமா..?

online mobile shopping

ஆன்லைனில் மொபைல் ஆடர் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

ஆன்லைனில் செல்போன் (online mobile shopping) வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஸ்மார்ட்போன் மிகவும் விலை குறைவாக ஆன்லைனில் விற்பனை செய்யும்போது, அந்த போன் நாம் எதிர்பார்த்தது போல் இருக்காது.

நாம் எதிர்பார்த்ததை விட வேறொரு ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும். எனவே நாம் ஆன்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும்போது, கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன் வாட்சப்பில் ரெட்மி போன் விலை குறைந்துவிட்டது என்று புரளிகளை கிளப்பிவிட்டார்கள் அல்லவா. அதேபோல் தற்போது ஆன்லைனில் சில வெப்சைட் 10,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மாட்போன் 2000/- ரூபாய் என்று விளம்பரம் படுத்திவருகின்றனர்.

கேலக்சி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு

அவற்றை நம்பி பலர் அவர்களது வெப்சைட்டில் ஸ்மார்ட்போனை ஆடர் (online mobile shopping) செய்வார்கள். அந்த ஸ்மாட்போன் நாம் எதிர்பார்த்ததுபோல் இருக்காது. நாம் ஆடர் செய்தது ஒன்றாக இருக்கும். நமக்கு வருவது வேறொன்றாக இருக்கும்.

குறிப்பாக சில வெப்சைட்டை சொல்ல வேண்டும் என்றால் linekraft மற்றும் jt store போன்ற வெப்சைட் தங்களது வெப்சைட்டுக்கு நல்ல டிராஃபிக் வர வேண்டும் என்று பலவகை பொய்யான விளம்பரங்கள் போட்டு பயனர்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர் அவற்றை நம்பி இனியாவது நாம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

நாம் எந்த பொருளை ஆடர் செய்தலும் குறிப்பாக அந்த வெப்சைட் நல்ல வெப்சைட்டாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு பின்பு நாம் பொருட்களை ஆடர் (online mobile shopping) செய்ய வேண்டும்.

குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற நல்ல வெப்சைட்டாக இருக்கிறதா  என்பதை சரி பார்த்து கொண்டு, நாம் எந்த பொருட்களை வேண்டுமெனாலும் ஆடர் (online mobile shopping) செய்து கொள்ளலாம்.

இதை மீறி விலை குறைவாக ஸ்மாட்போன் கிடைக்கிறது என்று வாயை பிளந்து கொண்டு ஆடர் செய்தீர்கள் என்றால் பின்பு ஏமாந்துதான் நிற்கவேண்டியதாக இருக்கும்.

உங்கள் 4G சிக்னல் Strength யை அதிகப்படுத்த ஒரு IDEA

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

SHARE