பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே இந்த தொழில் செய்வதால் மாதம் ரூ. 30,000 வரை சம்பாதிக்கலாம்..!

chocolate business ideas in tami

பெண்கள் பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

ஹலோ பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் வீட்டிலிருந்து சுயதொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்காக அருமையான தொழில் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய பொருள் தான் சாக்லேட். சாக்லேட் பிடிக்காதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? வீட்டிலிருக்கும் பெண்கள் சாக்லேட் பிசினஸ் தொடங்கி அதனால் நல்ல லாபம் பார்க்கலாம். ஆனால் சாக்லேட் பிசினஸ் தொடங்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயமில்லை. இந்த சாக்லேட் பிசினஸ் தொடங்குவதற்கு எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குடும்ப பெண்கள் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க அருமையான தொழில்கள்..!

வீட்டிலிருந்தே சாக்லேட் பிசினஸ் செய்வது எப்படி..?

சாக்லேட் பிசினஸ்

  • முதலில் சாக்லேட் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு நீங்கள் ரூ.5,000 வரை முதலீடு செய்யவேண்டும்.
  • பின் நீங்கள் சாக்லேட் செய்ய தேவையான மோல்டுகள் வாங்க வேண்டும்.
  • அதன் பின் நீங்கள் சரியான நபரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சரியான முறையில் சாக்லேட் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதை கற்றுக்கொண்டால் நீங்களும் சாக்லேட் பிசினஸ் தொடங்கி அதன் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.
  • அவர்கள் சொன்ன உபகரணங்களை வைத்து நீங்களும் சாக்லேட் செய்ய தொடங்கலாம்.
  • இந்த சாக்லேட் பிசினஸ் தொடங்குவதற்கு நேரமும் குறைவு தான். இதனால் நல்ல வருமானமும் கிடைக்கும்.
  • முதலில் நீங்கள் செய்யும் சாக்லேட்களை உங்கள் பகுதிகளில் இருப்பவர்கள்  மற்றும் தெரிந்தவர்கள் மூலம் விற்கத் தொடங்கலாம்.
  • உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் விற்பதால் சாக்லேட் சுவையை அறிந்து ஆர்டர்கள் உங்களை தேடி வரும்.
  • அதன் பின் இந்த சாக்லேட்களை பெரிய கடைகள் மற்றும் மார்க்கெட்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.
நீங்களும் வாழ்வில் முன்னேற அருமையான தொழில்..!

சாக்லேட் பிசினஸ் தொடங்குவது எப்படி..? 

நம் நாட்டில் பல வகையான சாக்லேட்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 5 கிலோ வரை சாக்லேட் பேக் செய்து விற்கலாம். ஆர்டர் கேட்பவர்களுக்கும் குறைந்த நேரத்தில் சாக்லேட் செய்து விற்பனை செய்யலாம்.  கால் கிலோ சாக்லேட்களை குறைந்தது 100 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

நீங்கள் எவ்வளவு சாக்லேட்டுகள் கொடுத்தீர்களோ அதை பொறுத்து வருமானம் கிடைக்கும். சாக்லேட்டை பெரிய கடைகளில் விற்பனை செய்தால் உங்களின் சாக்லேட் ருசியை கண்டு order வரும்.  நீங்கள் சொந்தமாக கடை வைத்து சாக்லேட்டுகளை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

அதுபோல, வாரம் 10 கிலோ முதல் 20 கிலோ வரை இன்றைய மார்க்கெட் விலையின் படி கிலோவிற்கு ரூ.2,000/- என  விற்பனை செய்யலாம். அதன் மூலம் வரும் ஆர்டர்களை செய்து கொடுத்தால் மாதம் ரூ. 30,000 வரை வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022