வயது ஏறினாலும் பெண்கள் பருவம் அடையாமல் இருப்பதற்கான காரணங்கள் மற்றும் தீர்வு

பெண்கள் வயதுக்கு வருவது தாமதம் ஆவது ஏன் தெரியுமா? | Girls Puberty Stages in Tamil

குறிப்பிட்ட வயது வந்த பிறகு பெண்கள் பருவமடைவது இயற்கை வகுத்த நியதி. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே தலைகீழ் தான். பெண்கள் மிக சீக்கிரமாகவே பருவம் அடைந்துவிடுகின்றன. பொதுவாக ஒரு பெண் 11 வயது முதல் 14 வயதிற்குள் பருவம் அடைய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிக சீக்கிரமாக 8 வயது, 9 வயதிலேயே பருவம் அடைந்துவிடுகின்றன. இதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழகான உணவுக்கும் ருசியான உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்க‍ப்படுகிறது. இருப்பினும் சில பெண்கள் பருவம் அடையாமலேயே இருப்பார்கள். அதற்கு என்ன காரணம் மற்றும் அதற்கான தீர்வு ஆகிய இரண்டையும் இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

காரணம் – Causes of Delayed Puberty in Girls Tamil:Causes of Delayed Puberty in Girls Tamil

பெண்கள் பருவம் அடைவதில் தாமதம் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்றால் உணவு முறை தான். இது தவிர மோசமான இயறக்கை சூழ்நிலை, ஹார்மோன்களில் மாற்றம், ஒழுங்கற்ற வாழ்கை முறை போன்ற பல காரணங்களை சொல்லலாம்.

தாமதமாக பருவம் அடைபவர்களுக்கு சத்து குறைப்பாடாக கூட இருக்கலாம்.

பெற்ற தாய் ஒரு பெண்ணிற்கு 11 முதல் 15 வயது வரை அந்த பெண் பருவம் அடைகிறாளா என்று பொறுத்திருந்து பார்க்கவும். ஒருவேளை 15 வயது ஆகியும் ஒரு பெண் பருவம் அடையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் மிக சிறந்த தீர்வாகும்.

மருத்துவர்களிடம் அழைத்து செல்வதற்கு முன்பு வீட்டில் இங்கு கூறப்பட்டுள்ள சில விஷயங்களை ட்ரை செய்து பாருங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?

கருப்பு எள்ளு:கருப்பு எள்ளு

கருப்பு எள்ளினினை வறுத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு இதனை காலை இரண்டு உருண்டை, மாலை இரண்டு உருண்டை என்று தினமும் இரண்டு வேளை உண்பதற்கு கொடுக்கவும். இவ்வாறு செய்வதினால் அந்த பெண் குழந்தை விரைவிலேயே பருவமடைந்துவிடுவார்கள்.

கருப்பு உளுந்து:கருப்பு உளுந்து

இந்த கருப்பு உளுந்தையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு சாப்பிடுவதற்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் பனைவெல்லம் கலந்து சாப்பிட கொடுக்கலாம். அல்லது உளுந்தங்களி செய்து கொடுக்கலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து கொடுத்தால் அந்த குழந்தை வெகு சீக்கரம் பருவம் அடைந்துவிடுவார்.

பிரெயிலர் கோழி:

முக்கியமாக பிரெயிலர் கோழியில் செய்த எந்த உணவுகளையும் அந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். வேண்டுமென்றால் நாட்டுக்கோழியில் செய்த உணவை கொடுக்கலாம்.அதேபோல் நாட்டுக்கோழி முட்டையை தினமும் ஒன்று கொடுத்து வரவும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips