Sharp Pain Left Side of Chest Woman in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பெண்களுக்கு இடது பக்க மார்பு அடிக்கடி வலிப்பது ஏன் (Sharp Pain Left Side of Chest Woman in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பெண்களுக்கு மார்பு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பெண்களுக்கு சில சமயங்களில் ஒருபுற மார்பில் மட்டும் அடிக்கடி வலி ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். பொதுவாக உடலின் இடது மார்பகத்தின் கீழ் இதயம், மண்ணீரல், வயிறு, கணையம் பெரிய குடல் போன்றவை உள்ளது. ஆகையால் பெண்களுக்கு இடது பக்க மார்பு வலிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவற்றை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What is The Reason for Chest Pain in Left Side for Female:
தசை காயம்:
பெண்களுக்கு இடது பக்க மார்பு வலி பெரும்பாலும் தசை காயத்தால் ஏற்படுகிறது. இவ்வீக்கம் நுரையீரல் பிரச்சனை அல்லது இதயத்தை சுற்றியுள்ள புறணி வீக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.
வலது பக்கம் நெஞ்சு வலிப்பதற்கான காரணம் என்ன.
மாரடைப்பு:
பெண்களின் இடது பக்க மார்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு தோன்றினால் அது மாரடைப்பதற்கான அறிகுறியாகும்.
நெஞ்செரிச்சல்:
பெண்களுக்கு இடது பக்க மார்பு அடிக்கடி வலிப்பதற்கு நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாகும். நெஞ்செரிச்சல் ஏற்பட்டு மார்பு பகுதியானது வலிக்க ஆரமிக்கிறது.
பித்தப்பை நோய்:
பித்தப்பையில் ஏதேனும் கற்கள் அல்லது வேறு பிரச்சனைகள் ஏற்படுவதன் மூலம் வயிற்றின் மேல் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தம் பரவி இடதுபக்க மார்பிற்கு சென்று மார்பு வலியை ஏற்படுத்துகிறது.
வயிற்று புண்:
உடலின் உணவுக்குழாய் அல்லது வயிற்று பகுதியில் புண்கள் ஏற்பட்டு வயிற்றில் வலியை ஏற்படுத்தும். இவ்வலி பரவி மார்பின் நடுப்பகுதி அல்லது இடபகுதிக்கு சென்றுவலியை உண்டாக்கும்.
கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுவதற்கான காரணங்கள் பற்றி தெரியுமா
நிமோனியா:
பெண்களுக்கு இடது பக்க மார்பு வலி ஏற்படுவது நிமோனியாவின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்.?
இடது பக்க மார்பில் வலி தொடர்ந்து நீடித்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.