Advertisement
மாம்பழம் வகைகள் பெயர்கள் | Types of Mangoes Varities in Tamil
நம் நாட்டில் மா, பலா, வாழை மூன்றும் முக்கனிகளில் ஒன்று. இந்த கனிகளில் முதலிடம் வகிப்பது மாம்பழம். மக்கள் அனைவரையும் சுவையான ருசியால் மயங்கவைக்கும் மந்திரப்பலம் மாம்பழம் என்று சொல்லலாம். இதனால் தான் உலக அளவில் மாம்பழம் சற்று பிரபலமாக உள்ளது. இப்படி பிரபலமாக இருக்கும் மாம்பழம் பல வகைகளில் உள்ளது, அந்த வகையில் நாம் இந்த பதிவில் மாம்பழத்தின் பெயர்கள் மற்றும் வகைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மாம்பழம் வகைகள் பெயர்கள்:
Mango Varieties in Tamil |
பங்கன பள்ளி |
அல்போன்சா மாம்பழம் (Alphonso) |
பாதாமி மாம்பழம் (Badami) |
தசெரி மாம்பழம் (Dussehri) |
கேசர் மாம்பழம் |
மல்கோவா மாம்பழம் |
மல்லிகா மாம்பழம் |
ராஸ்புரி மாம்பழம் (raspuri) |
செந்தூரம் மாம்பழம் (Sindura) |
ஊறுகா காய் (கிளி மூக்கு மாம்பழம்) |
இமாயத் (இமாம் பசந்தி) |
மாம்பழம் சாப்பிடுவதால் நன்மை தீமை |
பங்கன பள்ளி :
- இந்த மாம்பழம் ஆந்திராவில் மிகவும் Famous. அல்போன்சா மாம்பழத்தை விட சற்று பெரியதாக காட்சியளிக்கும் பங்கன பள்ளி மாம்பழங்கள்.
அல்போன்சா மாம்பழம் (Alphonso):
- அல்போன்சா குறைந்த அளவு புளிப்பு சுவையையும், அதிக அளவு இனிப்பு சுவையும் கொண்டது.
பாதாமி மாம்பழம் (Badami):
- இந்த பழமும் நல்ல இனிப்பு சுவையை உடையது, ஆனால் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இதை அப்படியே அல்லது ஜூஸ் ஆக செய்து சாப்பிடலாம்.
தசெரி மாம்பழம் (Dussehri):
- இந்த வகை மாம்பழம் உத்திரபிரதேசத்தை தாயகமாக கொண்டது. நன்கு இனிப்பாக மற்றும் சுவையாக இருக்கும்.
கேசர் மாம்பழம்:
- கேசர் மாம்பழம் அகமதபாத்தில் இருந்து வருகிறது. இதை நீங்கள் பச்சையாகவும் சாப்பிட முடியும்.
மல்கோவா மாம்பழம்:
- பார்க்க பெரியதாக காட்சியளிக்கும் மல்கோவா மாம்பழம், அல்போன்சாவுடன் ஒப்பிடும் போது பார்க்க அவ்வளவு சிறப்பாக தோற்றமளிக்காது. ஆனால் சுவையில் இதனை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
மல்லிகா மாம்பழம்:
- நீலம் மற்றும் தசேரி மாம்பழத்தின் கலப்பினமாக உள்ளது மல்லிகா மாம்பழம், இது இந்தியாவில் கிடைக்கும்.
ராஸ்புரி மாம்பழம் (raspuri):
- இந்த மாம்பழம் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்றது. இது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். நீள் வட்ட வடிவத்தில் இருக்கும்.
செந்தூரம் மாம்பழம்:
- மஞ்சள் மற்றும் பச்சை நிறம் கலந்தது போல் தோல் கொண்டிருக்கும் சிந்தூரா மாம்பழம், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.
- தேன் மாம்பழம் என்ற பெயரிலும் சிந்தூரா அழைக்கப்படுகிறது.
மாம்பழத்தின் பயன்கள்:
- இரத்த சோகையை குனபடுத்த உதவியாக இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவு உள்ளதால் சோகையை குணபடுத்தி இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
- வாதம் மற்றும் பித்தத்தை குணமாக்கும்.
- கண் நோயை சரிப்படுத்த உதவியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- மாம்பழத்தை தோலோடு சாப்பிட கூடாது. தோல் சத்து நிறைந்துள்ளது என்று கூறுவார்கள் ஆனால் தோலில் தான் அதை பழுக்கவைக்க அடிக்கப்படும் மருந்துகளும் நிறைந்து இருக்கும். எனவே, கடைகளில் கிடைக்கும் பழங்களின் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்தது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |
Advertisement