18 சித்தர்களின் பிறப்பும் மறைவும் | 18 Siddhar History in Tamil
Siddhargal Varalaru in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் 18 சித்தர்களின் வரலாற்றினை (siddhargal varalaru) இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். சித்தர்கள் நமக்கு பல வகையான மூலிகை மருந்துகளை கண்டுப்பிடித்து சென்றுள்ளனர். ஒவ்வொரு சித்தர்களும் கண்டுப்பிடித்த அனைத்து மூலிகைகளும் நமது உடலில் ஏற்படக்கூடிய தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் அனைவருமே பல நாட்கள் உடலில் நோயின்றி வாழ இளமை மூலிகை வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த பதிவில் ஒவ்வொரு சித்தர்களின் பிறப்பு மற்றும் அவர்கள் எத்தனை காலம் வாழ்ந்து வந்தார்கள் என்பதை பற்றி தெளிவாக படித்தறியலாம்.
அறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு..! |
18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு | Sithargal Varalaru:
வான்மீகர்
பிறப்பு: வான்மீகர் சித்தர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.
சட்டமுனி
பிறப்பு: சட்டமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 800 வருடம் 14 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: திருவரங்கத்தில் சமாதியடைந்தார்
பதஞ்சலி முனிவர்:
பிறப்பு: பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 5 யுகங்கள், 7 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: பதஞ்சலி முனிவர் இராமேஸ்வரத்தில் சமாதியடைந்தார்.
அகத்திய முனிவர்:
பிறப்பு: மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அகத்திய முனிவர் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 4 யுகம், 48 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: திருவனந்தபுரத்தில் அகத்திய முனிவர் சமாதியடைந்தார்.
போகர்
பிறப்பு: போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 300 வருடம், 18 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: போகர் ஆவினன்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார்.
கமலமுனி
பிறப்பு: வைகாசி மாதம், பூசம் நட்சத்திரத்தில் கமலமுனி சித்தர் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 4000 வருடங்கள், 48 நாட்கள் வாழ்ந்திருந்தார்.
இறப்பு: இவர் திருவாரூரில் சமாதியடைந்தார்.
திருமூலர்
பிறப்பு: புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் திருமூலர் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: திருமூலர் 3000 வருடம், 13 நாட்களும் வாழ்ந்திருந்தார்.
இறப்பு: சிதம்பரத்தில் திருமூலர் சமாதியடைந்தார்.
குதம்பை சித்தர்
பிறப்பு: ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் குதம்பை சித்தர் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 1800 வருடம், 16 நாட்கள் வாழ்ந்தவர்.
இறப்பு: மாயவரம் எனும் ஊரில் இவர் சமாதியடைந்தார்.
கோரக்கர்
பிறப்பு: கோரக்கர் சித்தர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 880 வருடமும், 11 நாட்கள் வாழ்ந்தார்.
இறப்பு: பேரூரில் சமாதியடைந்தார்.
தன்வந்தரி
பிறப்பு: ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் தன்வந்தரி.
வாழ்ந்த காலம்: 800 வருடம், 32 நாட்கள் வாழ்ந்து வந்தார்.
இறப்பு: வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதியடைந்தார்.
சுந்தரானந்தர்
பிறப்பு: சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 800 வருடம் 28 நாட்கள் வாழ்ந்து வந்தார்.
இறப்பு: மதுரையில் இவர் சமாதியடைந்தார்.
கொங்கணர்
பிறப்பு: சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 800 வருடம் 16 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: திருப்பதியில் சமாதியடைந்தார்.
ராமதேவர்
பிறப்பு: மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: அழகர் மலையில் சமாதியடைந்தார்.
நந்தீசுவரர்
பிறப்பு: வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 700 வருடம் 03 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: காசியில் சமாதியடைந்தார்.
இடைக்காடர்
பிறப்பு: புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 600 வருடம் 18 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
மச்சமுனி
பிறப்பு: ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.
கருவூரார்
பிறப்பு: சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 300 வருடம் 42 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: கரூரில் சமாதியடைந்தார்.
பாம்பாட்டி சித்தர்
பிறப்பு: கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
வாழ்ந்த காலம்: 123 வருடம் 14 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.
இறப்பு: சங்கரன்கோவிலில் சமாதியடைந்தார்.
இது போன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |