99 வகை சங்ககால மலர்கள் | 99 Flowers Name in Tamil

Advertisement

99 Flowers Name in Tamil List | 99 வகை மலர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! மலர்கள் என்றாலே அனைவரும் விரும்பி ரசிக்கக்கூடிய ஒன்று. மலர்களை கையில் பறித்து ரசிப்பதை விட மலர் அந்த செடியில் இருப்பது அதற்கென ஒரு தனி அழகு தான். சங்க நூல்களில் காணப்படும் மலர்களை சங்ககால மலர்கள் என்று கூறுவார்கள். குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. சங்க கால நூலில் இடம்பெற்றுள்ள 99 வகையான மலர் (99 flowers name in tamil list) பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

மலர்களும் அதன் மருத்துவ பயன்கள்..!

சங்ககால மலர்கள் | 99 வகை மலர்கள் | Kurinjipattu 99 Flowers Name in Tamil:

காந்தள்  ஆம்பல் 
அனிச்சம்  குவளை 
குறிஞ்சி  வெட்சி 
செங்கோட்டுவேரி  தேமாம்பூ 
மணிச்சிகை  உந்தூழ் 
கூவிளம்  எறுழ் 
சுள்ளி  கூவிரம் 
வடவனம்  வாகை 
குடசம்  எருவை 
செருவிளை  கருவிளம் 

 

பயினி  வானி 
குரவம்  பசும்பிடி 
வகுளம்  காயா 
ஆவிரை  வேரல் 
சூரல்  சிறுபூளை 
குறுநறுங்கண்ணி  குரு கிலை 
மருதம்  கோங்கம் 
போங்கம்  திலகம் 
பாதிரி  செருந்தி 
அதிரல்  சண்பகம் 

 

கரந்தை  குளவி 
மா (புளிமா) தில்லை 
பாலை  முல்லை 
பிடவம்  செங்கருங்காலி 
வாழை  வள்ளி 
நெய்தல்  தாழை 
தளவம்  தாமரை 
ஞாழல்  மௌவல் 
கொகுடி  சேடல் 
செம்மல்  சிறுசெங்குரலி 

 

பூக்கள் பெயர்கள்

 

கோடல்  கைதை 
வழை  காஞ்சி 
மணிக்குலை  பாங்கர் 
மரா அம்  தணக்கம் 
ஈங்கை  இலவம் 
கொன்றை  அடும்பு 
ஆத்தி  அவரை 
பகன்றை  பலாசம் 
பிண்டி  வஞ்சி 
பித்திகம்  சிந்துவாரம் 

 

தும்பை  துழாய் 
தோன்றி  நந்தி 
நறவம்  புன்னாகம் 
பாரம்  பீரம் 
குருக்கத்தி  ஆரம் 
காழ்வை  புன்னை 
நரந்தம்  நாகப்பூ 
நள்ளிருணாறி  குருந்தம் 
வேங்கை  புழகு 

 

பெயர்கள் சம்மந்தமான பதிவுகளை தெறிந்து கொள்ள இந்த  லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement