ஆண் குழந்தை விஷ்ணு பெயர்கள் | Lord Vishnu Names in Tamil

Advertisement

ஆண் குழந்தை பெருமாள் பெயர்கள் | Lord Vishnu Names in Tamil

பகவான் விஷ்ணு மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என பத்து அவதாரம் எடுத்துள்ளார். இவற்றில் கல்கி அவதாரம் என்பது விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்றாக கருதப்படுகிறது. இந்து சமயங்களில் நிறைய புராண கதைகள் இருக்கும். சரி உங்களின் இஷ்ட தெய்வம் விஷ்ணு பகவானாக இருக்கலாம். இதன் காரணமாக உங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தைக்கு விஷ்ணு பகவான் பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு பிறந்திருக்கும் ஆண் குழந்தைக்கு விஷ்ணு பகவான் பெயர்களை அந்த அர்த்தத்துடன் கீழ் அட்டவணையில் பட்டியலிட்டுளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் வீட்டில் இளவரசனுக்கு பெயராக வைத்து மகிழுங்கள்.

Lord Vishnu Names in Tamil for Baby Boy:-

ஆண் குழந்தை விஷ்ணு பெயர்கள்
அச்சுதன் ஸ்ரீ விஷ்ணு பகவான், ஒருபோதும் இறக்காதவர்
அரவிந்த் அன்பு, அவதாரம், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், அநுகூலமான
ஆதியன் தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு)
ஆதிசேஷன் ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம்.
பத்ரிபிரசாத் கடவுள் பத்ரிநாத்தின் பிரசாதம், பத்ரிநாத்தின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான்
சக்ரேஷ் ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர்
ஹரீஷ் ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர்
ஹரி ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம்
ஹரிஹரன் விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம்.
ஹரிசரண் இறைவனின் பாதங்கள்
ஹரிநாத் ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
ஹரிப்ரசாத் ஹரி – ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் – ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்
ஹரிஷ் ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
ஹயக்ரீவா குதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம்
ஜகன் பிரபஞ்சம், உலகம், ஸ்ரீ விஷ்ணு பகவான்
கமலநாதன் ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்
கமலேஷ் ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் பாதுகாவலர், தாமரை போன்ற கண்கள் கொண்டவர்
கேசவ் பகவான் கிருஷ்ணரின் பெயர், விஷ்ணு, நீளமான கூந்தல்
லட்சுமிதர் ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்
மங்களேஷ் மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்
ஸ்ரீனேஷ் கடவுளால் கொடுக்கப்பட்டது, ஸ்ரீவிஷ்ணு
வைஷ்ணவ் ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர்

 

கிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பேபி நேம் தமிழ்
Advertisement