Azithral 250 mg மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Azithral 250 mg Tablet Uses in Tamil

Advertisement

Azithral 250 mg Tablet Uses

உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் எடுத்து கொள்வது மாத்திரை தான். அந்த மாத்திரை எடுத்து கொண்டு உடல் நிலை குறைபாடு சரி ஆகிவிடும். ஆனால் மாத்திரைகளினால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரையை அப்படியே சாப்பிடாமல் அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம். அதனால் உடலில் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமானது. உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Azithral 250 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Azithral 250 mg Tablet Uses:

 Azithral 250 mg Tablet Uses in Tamil

அஸித்ரல் 250 மில்லி கிராம் மாத்திரை நுரையீரல், தோல் மற்றும் மென்மையான திசு நோய் தொற்று நோய்கள், காது தொற்று போன்ற நோய்களுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Azithral 250 mg Side Effects:

வயிற்றுப்போக்கு

குமட்டல் மற்றும் வாந்தி

நெஞ்சு வலி

மயக்கம்

உடல் சோர்வு

தலைவலி

காய்ச்சல்

Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்னெச்சரிக்கை:

தாய்ப்பால் கொடுப்பவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் அஸித்ரல் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

அஸித்ரல் மாத்திரை சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பொழுது இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது சில நேரங்களில் மயக்கம் ஏற்படும். அதனால் அப்பொழுது வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை எடுத்து கொண்டாலும் அந்த மாத்திரையை பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவு தான் மாத்திரை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து விட்டால் அதற்கு பதிலாக இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது. மருத்துவர் கூறிய அளவை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ எடுத்து கொள்ள கூடாது.

ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement