Cipzen Forte Tablet in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அதனால் நாம் ஒரு மருந்தினை உட்கொள்ளும் முன்னதாக அந்த மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்பது பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக்கொண்ட பிறகு தான் அந்த மருந்தினை உட்கொள்ளவேண்டும்.
இவ்வாறு நாம் பயன்படுத்தும் மருந்தினை பற்றிய சரியான புரிதல் கிடைத்த பிறகு மருந்தினை பயன்படுத்துவதன் மூலம் அந்த மருந்தின் பக்கவிளைவுகளிலிருந்து நாம் நம்மை பாதுக்காத்துக்கொள்ளலாம். அந்தவகையில் இன்றைய பதிவில் சிப்ஸன் ஃபோர்டே (Cipzen Forte Tablet) மாத்திரை பற்றிய சில தகவலைகளை தான் அறிந்துக்கொள்ள போகின்றோம்.
டிஸ்பாஸ் மாத்திரை பற்றிய தகவல்
Cipzen Forte Tablet Uses in Tamil:
இந்த சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை (Cipzen Forte Tablet) ஒரு ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் மற்றும் வலி நிவாரணியாகவும் உள்ளது. இந்த மருந்தினால் மூட்டு மற்றும் தசைகளில் இருக்கும் மிதமான மற்றும் கடுமையான வலியை கூட திறம்பட குணப்படுத்த முடியும்.
மேலும் இந்த மருந்து உடலில் உள்ள புரோஸ்டாகிளாண்டின் உற்பத்தியையும் மற்றும் சைக்ளோ ஆக்சிஜனேஸ் உற்பத்தியையும் தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது. பொதுவாக இந்த புரோஸ்டாகிளாண்டின் மற்றும் சைக்ளோ ஆக்சிஜனேஸ் ஆகியவை அழற்சி, தீவிர வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஆகியவற்றிற்கு காரணமாகின்றன.
சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை (Cipzen Forte Tablet) வெறும் 15 நிமிடங்களில் எப்பேர்ப்பட்ட கடுமையான வலியிலிருந்தும் விரைவான நிவாரணம் கிடைக்கச் செய்கிறது.
ஆனாலும் இந்த மருந்தை நீண்ட காலம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய தீங்கான பக்கவிளைவுகள் காரணமாக, 15 நாட்களுக்குள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது.
இந்த மருந்து இரத்த உறைவு, முடக்குவாதம், முதுமை மூட்டுவலி, காது நோய்த்தொற்றுகள் மற்றும் மாதவிளக்கு வலி ஆகியவற்றிற்கு நல்ல பலனை தருகிறது.
மேலும் இந்த மருந்து காய்ச்சலைக் குறைக்கவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்வதற்கும் பயன்படுகிறது.
மெட்லர் பிளஸ் மாத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா
பயன்படுத்தும் முறை:
இந்த சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை (Cipzen Forte Tablet) மாத்திரை வடிவில் கிடைக்கும். இதனை உணவுடன் அல்லது உணவுக்கு பின்னரும் எடுத்து கொள்ளலாம். பொதுவாக 100 மிகி கொண்ட இந்த மாத்திரையை ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு நோயாளியின் அறிகுறிகள் மற்றும் நோய் வேறுபடும் என்பதால் உங்களின் மருத்துவரின் பரிந்துரையின் படி இதனை பயன்படுத்துவது நல்லது.
Cipzen Forte Tablet Side Effects in Tamil:
இந்த மருந்தினை பயன்படுத்துவதினால் நெஞ்செரிச்சல், குமட்டல், வயிறு பிடிப்பு அல்லது வலி மற்றும் வாந்தி போன்ற சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
உங்களுக்கு இந்த மருந்து உடன் ஒவ்வாமை இருந்தால், தோலில் ஏற்படும் தோல் அரிப்பு, மூச்சுத் திணறல், தோல் வீக்கம் மற்றும் நாக்கில் வீக்கம் போன்ற ஒவ்வாமைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
சைக்ளோபம் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |