Dolopar மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க..!

Advertisement

Dolopar Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல் நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் இருக்கின்றது. அதிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதற்காக நாம் மருந்துகளேயே அதிக அளவு பயன்படுத்துவோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய சூழலில் உலகமே மருந்தினால் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் உங்கள் உடல் நலத்தை சரி செய்வதற்காக பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய முழு விவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம் அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dolopar மாத்திரை எந்தெந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Dolokind Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

Dolopar Tablet Uses in Tamil:

Dolopar Tablet Side Effects in Tamil

டோலோபார் மாத்திரை (Dolopar Tablet) லேசான வலிகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது தலைவலி, ஒற்றைத் தலைவலி, பல்வலி, தொண்டை வலி, மாதவிடாய் வலி மற்றும் நரம்பு வலி போன்ற லேசானது முதல் மிதமான வலிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

மேலும் இந்த மாத்திரை சுளுக்கு, தசை வலி, மூட்டு வீக்கம் மற்றும் விறைப்பு போன்றவற்றிற்கும் ஒரு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்த மருந்து மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது மற்றும் வாய் வழியாக எடுத்து கொள்ளலாம்.

அதே போல் இதில் பல மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது. அப்படி எடுத்து கொண்டால் இது உங்களுக்கு பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

Redotil மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

Dolopar Tablet Side Effects in Tamil:

  • வயிற்று வலி
  • குமட்டல்
  • வாந்தி
  • தோல் தடிப்பு
  • மூச்சு திணறல்
  • கல்லீரல் சேதம்

Dolopar மாத்திரையை பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

நீங்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஏதேனும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.

கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களாகவோ இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.

அதே போல் 12 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

ஓமி டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement