புளுக்கோனசோல் மாத்திரை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Fluconazole Tablet Uses in Tamil
Fluconazole Tablet Uses in Tamil: நம் உடம்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகளில் ஒன்றுதான் இந்த புளுக்கோனசோல் மாத்திரை. நாம் இன்றைய மருந்து பதிவில் புளுக்கோனசோல் மாத்திரை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன, அதிகமாக பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவுகள் வரும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
புளுக்கோனசோல் மாத்திரை நன்மைகள் | Fluconazole Tablet Uses in Tamil:
- பங்கஸ் (Fungus) தொற்றுக்களை மற்றும் சிறுநீர் பாதை தொற்றுக்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.
- யோனி ஈஸ்ட் எனப்படும் பூஞ்சை தொற்றுக்களை சரி செய்ய உதவுகிறது.
- பூஞ்சை தொற்று, படர்தாமரை, புனர் புழை தொற்றுக்களை சரிசெய்ய பொதுவாக பயன்படுகிறது.
- இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பூஞ்சை தொற்று முற்றிலும் குணமாகிறது.
புளுக்கோனசோல் மாத்திரை பக்க விளைவுகள் – Fluconazole Tablet Side Effects in Tamil – Fluconazole Side Effects
- தோல் வெடித்து போதல் மற்றும் தடித்து போவது, உடல் சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- உடல் வலுவிழந்து போதல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- தசை பிடிப்பு நோய், கல்லீரல் செயலிழப்பு, தலைவலி அல்லது தலை சுற்றல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- மேற்குறிப்பிட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் |
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள் |
Fluconazole மாத்திரை சாப்பிட கூடாதவர்கள்:
- சிறுநீரக, பல் ஈரல் கோளாறு மற்றும் கல்லிரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
- ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த கூடாது.
- கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சிப்பவர்கள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
- மது அருந்துபவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மருத்துவர் ஆலோசனையை கேட்டு பின்னர் இந்த Fluconazole மாத்திரையை சாப்பிடலாம்.
- ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் வேறு ஏதேனும் உடல் நல குறைவு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம்.
சாப்பிடும் முறை:
- இந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு பயன்படுத்துவது நல்லது.
- மருத்துவர் எந்த நேரத்தில், எவ்வளவு டோஸேஜ் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள்.
மருந்தளவு:
- 200MG, 150MG
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் |
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |