லிம்சீ மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Limcee Tablet Uses in Tamil

Advertisement

லிம்சீ மாத்திரை பயன்கள் | Limcee Tablet Uses in Tamil 

Limcee Tablet Uses in Tamil: நம் உடம்பில் வைட்டமின் சி சத்து குறைபாட்டால் கண் பார்வை மங்கலாக தெரிவது, ஈறுகளில் ரத்த கசிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு நம்மில் சில பேர் உடம்பில் விட்டமின் சி சத்து அதிகரிப்பதற்காக விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வோம், இல்லையெனில் சில பேர் மாத்திரை எடுத்து கொள்வார்கள். அப்படி விட்டமின் சி குறைபாட்டால் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் விட்டமின் சி சத்து அதிகரிப்பதற்காக சாப்பிடும் லிம்சீ மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

லிம்சீ மாத்திரை:

Limcee Tablet Uses in Tamil 

Limcee Tablet Uses in Tamil – லிம்சீ மாத்திரை பயன்கள் – Limcee Tablet – Uses in Tamil

 • லிம்சீ மாத்திரை உடம்பில் வைட்டமின் சி சத்துக்களை அதிகரிப்பதற்கு பயன்படுகிறது.
 • இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடம்பில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தீக்காயங்கள் மற்றும் புண்களை சரி செய்யவும் உதவுகிறது.
 • புதிய செல்களை உருவாக்கவும், உடம்பில் செல்கள் சேதமடைவதை தடுக்கவும் பயன்படுகிறது.
 • வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோயை குணப்படுத்த உதவுகிறது.
 • ஆணிகள், திசுக்கள் மற்றும் காயங்களை குணப்படுவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
 • இந்த மாத்திரையை சாப்பிடுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

லிம்சீ மாத்திரை பக்க விளைவுகள் – Limcee Tablet Side Effects in Tamil

 • இந்த மாத்திரையை அதிகமாக எடுத்து கொள்வதால் தலைவலி, வயிற்று கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • முதுகு வலி, தோல் சிவந்து போதல், வாந்தி அல்லது மயக்கம், குமட்டல், வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • Diarrhoea, Cephalalgia போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மேற்குறிப்பிட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

லிம்சீ மாத்திரை யார் சாப்பிடலாம் மற்றும் யார் சாப்பிடக் கூடாது?

 • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
 • மது அருந்திவிட்டு இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
 • லிம்சீ மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிட்ட பிறகு கூட எடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை மருத்துவர் எந்த நேரத்தில்? எப்போது? எந்த அளவு Dosage எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறாரோ அப்பொழுது சாப்பிடுவது சிறந்தது.
 • வேறு ஏதேனும் உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இந்த மாத்திரையை சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறினால் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பான் 40 மிகி மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்கவிளைவுகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil

 

Advertisement