Nefita மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Nefita Tablet Uses and Side Effects in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கமும் தான். மேலும் இவற்றால் அதிகரித்துள்ள நோய்களும் தான் காரணம். அப்படி அதிகரித்துள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது நல்லது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் Nefita மாத்திரையை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Metformin 500 mg மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Nefita Tablet Uses in Tamil:

Nefita Tablet Uses in Tamil

பொதுவாக இந்த Nefita மாத்திரையானது உடலில் ஏற்படும் ஹீமோகுளோபின் குறைபாடு, ஃபோலிக் அமிலம் ஒரு பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் மெகலோ பிளாஸ்டிக் அனீமியா, இருதய நோய் மற்றும் வைட்டமின் குறைபாடு போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்கின்றது.

மேலும் இந்த மருந்து சிறுநீரக நோய் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்குப் பூர்த்தி செய்யும் பல வைட்டமின் சப்ளிமெண்ட்களை கொண்டுள்ளது. அதனால் இந்த மாத்திரை அவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுகின்றது.

இந்த மருந்து வாய் வழியாக எடுத்து கொள்ளக்கூடிய கரைசல் அல்லது மாத்திரை வடிவத்திலும் கூட கிடைக்கிறது.

Nefita Tablet Side Effects in Tamil:

  1. தலைவலி 
  2. தலைச்சுற்றல் 
  3. பசியின்மை
  4. குமட்டல் 
  5. அரிப்பு 
  6. தொண்டை வலி 
  7. நெஞ்செரிச்சல் 
  8. சுவாசிப்பதில் கடினம்
  9. தோல் எரிச்சல் 
  10. வயிற்றுப்போக்கு  

Nefita மாத்திரையை நீங்கள் உட்கொள்ளும் போது மேல்கூறிய அறிகுறிகள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Gutrex D 5 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

அதிலும் குறிப்பாக நீங்கள் கற்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளிக்கும் தாய்மாராக இருந்தாலும் இந்த Nefita மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Dexorange மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement