பூரான் கடிக்கு வீட்டுலேயே சிறந்த பாட்டி வைத்தியம்

Advertisement

பூரான் கடிக்கு பாட்டி வைத்தியம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் பூரான் கடிக்கு வீட்டில் இருந்தபடியே எளிமையான பாட்டி வைத்தியம் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பூரான் கடித்தால் அந்த இடம் சிவந்து போகுதல், வீக்கம், எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். பூரான் கடிப்பதை லேசாக எடுத்துக்கொள்ளாமல் அதற்கு உரிய மருந்துகளை பூரான் கடித்த முதலில் போட வேண்டும். ஆனால், நம்மில் பலருக்கும் பூரான் கடிக்கு என்ன நாட்டு மருந்து போட வேண்டும் என்பதே தெரிவதில்லை. எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பூரான் கடிக்கு போட வேண்டிய பாட்டி வைத்தியம் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

இந்த மருந்து குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். பொதுவாகவே பலரது வீட்டில் அடசல்கள் எதுவும் இருந்தால் பூரான்கள் அதிகமாவே இருக்கும், எனவே வீட்டில் ஒரு சிலரை பூரான் கடித்து விட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு இந்த மருந்துகளை தடவுவதன் மூலம் பூரான்கடி விஷத்தை ஏறவிடாமல் செய்யலாம். மேலும் அந்த மருந்தை எப்படி தயாரித்து உபயோகிப்பது என்று தெரிந்துகொள்ளலாம்  வாங்க.

கம்பளி பூச்சி கடியின் எரிச்சலை குணப்படுத்தும் மருந்துகள் உங்களுக்கு தெரியுமா..!

பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும்:

பூரான் கடித்துவிட்டால் பயப்படாமல், பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும், ஏனென்றால் பதட்டத்தோடு இருந்தால் இரத்த ஓட்டம் திடீர் என்று அதிகமாகிவிடும், இதனாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். பூரான் கடித்தவுடனே வீட்டில் உள்ள மிளகு, வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பொருட்கள் இருந்தால் அதை வைத்து சிகிச்சை செய்தவுடன், மருத்துவமனைக்கு செல்லவது மிகவும் அவசியம்.

மேலும் பாட்டி சொன்ன சின்ன சின்ன மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம், மேலும் இவற்றால் ஏற்படும் பயன்கள் என்னவென்றும் பார்க்கலாம்.

பூரான் கடித்தால் நாட்டு வைத்தியம்:

சுண்ணாம்பு மருத்துவ குறிப்பு:

சுண்ணாம்பு மருத்துவ குறிப்பு

பூரான் கடித்தவுடன் சுண்ணாம்பை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கலந்தவுடன் கடித்த இடத்தில் தடவ வேண்டும். இந்த சுண்ணாம்பு தடவுவதன் மூலம் விஷக்கடியை முழுவதுமாக உறிஞ்சி எடுத்துவிடும். இந்த சுண்ணாம்பை பூரான் கடிக்கு மட்டுமல்லாமல் பலவகையான விஷக்கடிகளுக்கு பயன்படுத்தலாம்.

தேங்காய் மருத்துவ குறிப்பு:

தேங்காய் மருத்துவ குறிப்பு

அடுத்ததாக வீட்டில் இருக்கும் முத்தின தேங்காவை எடுத்து கொண்டு அதை இரண்டாக உடைத்த பிறகு, அதில் உள்ள ஒரு பகுதியை  எதுவம் சேர்க்காமல் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடனே பூரான் கடித்த விஷக்கடி முறிந்துவிடும்.

வெற்றிலை மருத்தவ குறிப்பு:

 வெற்றிலை மருத்தவ குறிப்பு

வெற்றிலையை எடுத்துக்கொண்டு காம்பையும், கீழ் இருக்கும் நுனியையும் நீக்கி கொண்டு, அந்த வெற்றிலையில் 15 மிளகுகளை வைத்து நன்றாக மடித்து சாப்பிட வேண்டும், தேங்காய் இல்லாதவர்கள் இந்த மருந்தை எடுத்து கொண்டால் விஷக்கடி நீங்கிவிடும்.

மிளகை வைத்து வெற்றிலையில் சாப்பிடுவதால், விஷத்தை வேகமாக முறிக்க கூடிய தன்மைகள் அதிகமாவே இருக்கிறது, இதை நம் முன்னோர்கள் பலகாலத்தில் ஒரு பழமொழியும் வைத்துள்ளார்கள், “பத்து மிளகு இருந்தால் பகவான் வீட்டில் கூட சாப்பிடலாம்” என்று கூறியுள்ளார்கள்.

பூரான் கடித்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவி பற்றி தெரிந்துக்கொள்வோம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்

 

Advertisement