Trapic MF Tablet
இந்த காலகட்டத்தில் நமக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றால் நாம் உடனே மருத்துவரை அணுகாமல் மருந்து கடைகளுக்கு சென்று பிரச்சனையை கூறி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இப்படி செய்வது தவறு. நாம் மருத்துவர் எழுதி கொடுக்கும் மாத்திரையை தான் வாங்கி சாப்பிட வேண்டும். சரி நீங்கள் இதுவரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு இருப்பீர்கள்.
அப்படி சாப்பிடும் போது அந்த மாத்திரை எதற்கு பயன்படுகிறது அதை சாப்பிட்டால் என்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை தெரிந்து கொண்டு இருக்கிறீர்களா..? உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் ட்ராபிக் எம்.எஃப் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!
அவோமின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Trapic MF Tablet Uses in Tamil:
Trapic MF மாத்திரையானது 2 அளவுகளில் கிடைக்கிறது. 250 மி.கி மற்றும் 500 மி.கி. இந்த மாத்திரை மெஃபெனிமிக் ( Mefenamic ) அமிலம் மற்றும் டிரான்எக்ஸமிக் ( Tranexamic ) அமிலம் என்ற இரண்டு அமிலங்களின் கூட்டு கலவையினால் தயாரிக்கப்படுகிறது.
இந்த Trapic MF மாத்திரை மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் வலிகளுக்கு நிவாரணியாக பயன்படுகிறது.
மேலும் இந்த மாத்திரை இரத்தம் உறைதலை தடுத்து அதிக இரத்தப் போக்கினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
ட்ராபிக் எம்.எஃப் மாத்திரையின் பக்கவிளைவுகள்:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்று வலி
- தலைவலி
- நெஞ்செரிச்சல்
- வயிற்றுப்போக்கு
- அதிகமாக துாக்கம் வருவது போன்ற உணர்வு
- தசைவலி
- இரத்த செல்களின் அணுக்கள் குறைதல்
- அனீமியா
இந்த Trapic MF மாத்திரையை உட்கொள்ளும் போது மேல்கூறப்பட்டுள்ள பக்கவிளைவுகளில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மாத்திரை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Trapic MF மாத்திரையை எப்படி பயன்படுத்துவது..?
இந்த மாத்திரையை உணவுக்கு முன்னரோ அல்லது உணவுக்கு பின்போ உட்கொள்ளலாம். மருத்துவர் எப்படி பரிந்துரை செய்கிறாரோ அதன் படி உட்கொள்வது நல்லது.
இந்த மாத்திரையை மது அருந்துபவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், வாகனம் ஓட்டுபவர்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதை உட்கொள்ள கூடாது.
Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |