Zenflox 200 Tablet Uses
நமது உடலில் இருக்கும் பல வகையான பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் தான் பலவகையான தீர்வினை அளிக்கிறது. அப்படி பலவகையான தீர்வினை அது அளித்தாலும் கூட அதில் நமக்கு தெரியதா சில பக்க விளைவுகளும் உள்ளடங்கி உள்ளது. குறிப்பாக சிலர் உடம்பில் ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தால் கூட உடனே கடையில் விற்கும் மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள். இதுமாதிரி மருத்துவரின் அனுமதி இல்லாமல் வாங்கி சாப்பிடுவதும் நமக்கு ஏதோ ஒரு வகையில் பக்க விளைவினை ஏற்படுத்தும். மேலும் நம் உடம்பில் ஏதாவது நோய் இருந்தால் அதனை நமது உடலில் அறிகுறி மூலம் வெளிப்படுத்தும் இதுபோலவே மருந்துகள் எடுத்துக்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கான அறிகுறிகளும் உடனே தோன்றும். ஆகையால் ஒரு மாத்திரையை நாம் சாப்பிடுவதற்கு முன்பாக அதில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்வது நல்லது. அதனால் இன்று Zenflox 200 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Zenflox 200 மாத்திரையின் பயன்கள்:
Zenflox 200 மாத்திரையானது பாக்டீரியா தொற்றுகளுக்கு நல்ல பலனை அளிக்கும் ஒரு மருந்தாக உள்ளது. சிறுநீர் குழாய், சுவாசக்குழாய் மற்றும் நம் உடலில் உள்ள தோல் அலர்ஜி போன்றவற்றில் பாக்டீரியாவால் தொற்றுகள் எதுவும் வந்து இருந்தால் அதனை சரிசெய்வதற்காக மருத்துவர்களால் நோயாளிகளுக்கு ஆலோசனை செய்யப்படுகிறது.
அதுபோல இந்த மாத்திரை கண் மற்றும் காதுகளில் பிரச்சனை மற்றும் டைபாய்டு காய்ச்சல், காச நோய் போன்றவற்றிற்கும் விரைவில் நல்ல பலனை அளிக்கிறது.
Zenflox 200 சாப்பிடும் முறை:
மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை செய்த அளவில் மட்டுமே நீங்கள் Zenflox 200 மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக மாத்திரையை கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
இந்த மாத்திரையை தண்ணீருடன் மட்டுமே முழுங்க வேண்டும். அதுபோல இந்த மாத்திரையை பொடியாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
Zenflox 200 Tablet Side Effects in Tamil:
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- மயக்கம்
- வாந்தி
- குமட்டல்
- உடலில் அரிப்பு
- நாக்கில் சுவையின்மை
- தூக்கம் தொடர்பான பிரச்சனை
- மூட்டு வலி
- தலைசுற்றல்
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் Zenflox 200 மாத்திரையை எடுத்துக்கொண்ட பின்பு உங்களுக்கு வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை மருத்துவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..! |
முன்னெச்சரிக்கை:
- மது அருந்துபவர்
- கர்ப்பிணி பெண்கள்
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கம் பெண்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
- சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள்
- உடலில் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவர் Zenflox 200 மாத்திரையை ஆலோசனை செய்வதற்கு முன்பாக தற்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறை பற்றியும் மற்றும் வேறு ஏதேனும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் அது பற்றியும் தெளிவாக மறைக்காமல் கூற வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |