மூலம் நோய் குணமாக யோகாசனம்..!

linga muthirai yoga in tamil

மூலம் நோய் குணமாக யோகாசனம்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய யோகா பதிவில் மூலம் நோய் குணமாக சில யோக முத்திரைகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் இந்த மூலம் நோய் என்பது இளம் வயது முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. பொதுவாக உடலில் ஏற்படும் அதிகப்படியான உஷ்ணத்தினால் தான் இந்த மூலநோய் ஏற்படுகிறது. அதனால் இந்த மூலநோய் உள்ளவர்கள் இன்றைய பதிவில் கூறியுள்ள யோக முத்திரைகளை தொடர்ந்து செய்து வந்தால்  மூலநோயிலிருந்து விடுபடலாம்.

மூலம் நோய் குணமாக யோகாசனம்:

பொதுவாக மூலநோய்  ஏற்பட காரணங்கள் உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணத்தினால் மற்றும் நாம் உண்ணக்கூடிய அதிகப்படியான காரத்தினாலும் தான். அதனால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து மூலநோயை குணப்படுத்தும் முத்திரைகளை பற்றி பார்க்கலாம்.

1. லிங்க முத்திரை:

linga muthirai seivathu eppadi in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்துவிட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.

அதன் பிறகு இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த லிங்க முத்திரையை தினமும்  செய்து வருவதன் மூலம் உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். மேலும் கபத்தை அகற்றும், ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்சனைகள் நீங்கும். வறட்டு இருமல் மற்றும் நீர்க்கட்டு பிரச்சனைகள் சரியாகும்.

2. அஸ்வினி முத்திரை :

ashwini mudra in tamil

இந்த முத்திரை செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு ஆசனவாயை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை தினமும்  செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்=> மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா