ஆஸ்துமா நீங்க யோகா
இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகளும் உடற்பயிற்சிகளும் தான் அதற்கு காரணமாக இருந்தது. மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத வியாதிகளை கூட உடற்பயிற்சியால் குணப்படுத்த முடியும். அந்த வகையில் இன்று ஆஸ்துமா குணமாக யோகாசனம் செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்த யோகாவை மட்டும் செய்தால் காலத்திற்கும் உங்களுக்கு பாதவெடிப்பு வரவே வராது..! |
ஆஸ்துமா நீங்க யோகாசனம்:
Dog Breathing Yoga in Tamil:
முதலில் நாம் வஜ்ராசன நிலையில் உட்கார வேண்டும்.
அடுத்து நம் கைகளை முழங்காலின் பக்கத்தில் வைத்து, கை விரல்கள் நம்மை பார்த்து இருக்கும் படி அதாவது உள்நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும்.
பின் நம் தலையை நீட்டி நாக்கை முழுவதுமாக வெளியே நீட்ட வேண்டும். பிறகு மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். இதுபோல தினமும் காலையில் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பயன்கள்:
இதுபோல செய்வதால் நுரையீரலில் தங்கி இருக்கும் சளி கரைந்து வெளியே வந்துவிடும். அதுபோல இந்த பயிற்சி ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா முற்றிலும் குணமாகும்.
மேலும் இந்த யோகாசனம் செய்வதால் வயிற்று பகுதியில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடையை குறைகிறது.
குறட்டையை குறைக்க மாத்திரை எதுவும் வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்..! |
மர்ஜரி ஆசனம் செய்யும் முறை:
விரிப்பில் மண்டியிட்டு அமர வேண்டும். உங்கள் மணிக்கட்டு உங்கள் தோள்களுக்கு நேர் நிலையில் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் நிலையில் கீழாகவும் இருக்க வேண்டும்.
மூச்சை வெளிவிட்டவாறே வயிற்றை உள்ளிழுத்து முதுகை முடிந்தவரை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.
பின் தலையை தொங்க விட வேண்டும். இதுபோல சில நொடிகள் இருந்த பிறகு பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல தினமும் காலையில் 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
நன்மைகள்:
- இதுபோல செய்வதால் இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
- வயிற்றின் உள் உறுப்புகளை பலப்படுத்துகிறது.
- நுரையீரலில் தங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்றுகிறது.
- சுவாச பாதையில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
- ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் இந்த யோகாவை தொடர்ந்து செய்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.
இதையும் படியுங்கள்⇒ சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!
முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க |
மேலும் இதுபோன்ற யோகாசனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | யோகா |