Meditation Tips in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் தியானம் பயிற்சியினை துவங்குவதற்கு சில அற்புதமான குறிப்புகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றும். அந்த வகையில் செலவுகள் இல்லாமல் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யோகா மற்றும் தியான பயிற்சிகளை செய்வார்கள். சிலருக்கு இந்த தியானத்தை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் இருப்பார்கள், அவர்களுக்கு எப்படி தியானத்தில் ஈடுபடவேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம் வாங்க.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் |
தியானம் செய்ய சரியான நேரம் எது.?
முதலில் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதாவது உங்களுக்கு எந்த விதமான தொல்லைகளும் இல்லாமல் உங்களை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் நேரத்தில் தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பொதுவாகவே தியானம் செய்வதற்கு உகந்த நேரம் அதிகாலை 4.00 AM முதல் 5.00 AM மணி வரையிலான நேரத்தில் செய்வது நல்லது.
தியானம் செய்ய உகந்த இடம்:
தியானம் செய்வதற்கு எப்படி நல்ல நேரத்தை தேர்வு செய்கிறீர்களோ அதேபோல் தான் நல்ல ஒரு இடத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அதாவது நல்ல தூய்மையான இடங்களாகவும், அமைதியான சூழல் நிறைந்த இடமாகவும் இருக்க வேண்டும். இதுவே தியானம் செய்வதற்கு உகந்த இடமாகும்.
தியானம் செய்ய அமர்வது எப்படி.?
பொதுவாக தியானம் செய்யும் பொழுது பத்மாசனத்தில் அமர்வது மிகவும் முக்கியம். நீங்கள் அமர்ந்த பிறகு உங்களுடைய முதுகு தண்டு பகுதி நேராக இருக்க வேண்டும். அமர்ந்த பிறகு அசையாமல் கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். முழுமையாக அமர்ந்த பிறகு ஆழ்ந்த மூச்சினை உள்ளே மற்றும் வெளியே என்று பொறுமையாக விட வேண்டும்.
தியானம் செய்யும் வழிமுறைகள்:
தியானம் செய்வதற்கு முன்பு உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது. மிகுந்த பசி இருக்கும் பொழுது தியானத்தை செய்யவேண்டாம் என்றும் சொல்லப்படுகிறது.
தியானம் செய்யும் பொழுது உணவை பற்றிய சிந்தனைகள் இருக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே உணவுகள் அருந்திய பிறகு 2 மணி நேரத்திற்கு பிறகு தியானத்தில் ஈடுபடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
தியானத்தை செய்து முடித்து இறுதியாக கண் திறக்கும் பொழுது பொறுமையாக திறப்பது அவசியம். அவசரமாக கண்களை திறக்க கூடாது. உங்களையும் உங்களுடைய சுற்றுப்புறங்களையும் உணர்ந்து கண்களை திறப்பது அவசியம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |