முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க

prasanna mudra for hair in tamil

முடி வளர யோகாசனம்

ஹாய் நண்பர்களே…! கை, கால் வலி, முதுகு வலி ஏன் சர்க்கரை நோய்க்கு கூட யோகாசனம் செய்து இருப்பீர்கள். ஆனால் முடி வளர யோகா செய்து இருக்க மாட்டீர்கள். முடி வளர கஷ்டம் என்று நினைக்கும் ஆண், பெண் இருவருக்கும் விரைவில் அதிகமாக முடி வளர என்ன யோகா செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். வாங்க நண்பர்களே உங்களுடைய வீட்டிலும் இந்த யோகாவை செய்து எப்படி பயன்பெறலாம் என்று பதிவை முழுவதுமாக படித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!

பிரசன்ன யோகா செய்முறை:

prasanna mudra benefits in tamil

முடி வளர்ச்சிக்கு செய்யவேண்டிய யோகா பிரசன்ன சித்த யோகா. இந்த யோகாவின் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் நீங்கள் முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உடல், மனம், மூச்சு ஆகிய மூன்றையும் ஒருநிலைப்படுத்தி கொள்ளுங்கள்.

அடுத்ததாக உங்களுடைய இரண்டு கைகளையும் மடக்கி கட்டை விரலை மட்டும் நேராக வைத்து கொண்டு அனைத்து நகங்களும் ஒன்றோடு ஒன்று ஒரசிக்கொள்ளுமாறு வைத்து 5 நிமிடம் மூச்சை இழுத்து பொறுமையாக விடுங்கள். இதுவே பிரசன்ன யோகாவின் நிலையாகும்.

நீங்கள் சாப்பிட்டவுடன் இந்த யோகாவை செய்யக்கூடாது. 1 மணி நேரம் இடைவெளி விட்டு தான் செய்ய வேண்டும்.

தினமும் இந்த யோகாவை நீங்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்தால் முடி வளர்ச்சிக்கு நல்ல பலனை தரும்.

பிரசன்ன யோகா பயன்கள்:

உடலில் சூடு அதிகரிக்கும் போது முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அதனால் தினமும் நீங்கள் இந்த யோகாவை செய்தால் உடல் சூட்டை குறைத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

உடலில் சுரப்பிகள் சுரக்க செய்வதற்கு நல்ல பலனை தருகிறது. இந்த யோகா செய்பவர்கள் அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

இந்த யோகாவையும் செய்து கொண்டு வாரம் ஒருமுறை இளநீர் குடித்து வந்தால் உடம்பிற்கும் முடிக்கும் நல்ல நன்மையை தரும்.

அதுபோல தினமும் தேங்காயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த யோகா செய்பவர்கள் தேங்காய் உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.

இந்த யோகா பெண்களுக்கு அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.

        இதையும் படியுங்கள் 👇 👇 👇  யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com