நரம்பு தளர்ச்சி குணமாக இந்த ஆசனத்தை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

நரம்பு தளர்ச்சி குணமாக யோகா

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நரம்பு தளர்ச்சி குணமாக செய்ய வேண்டிய யோகா என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். கை வலி, கால் வலி, முதுகு வலி, தொப்பை குறைய, கண் பார்வை மற்றும் நுரையீரல் பிரச்சனை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கு யோகாசனம் செய்து இருப்பீர்கள். அத்தகைய வரிசையில் நரம்பு தளர்ச்சிக்கும் யோகா இருக்கிறது. சரி வாங்க நண்பர்களே நரம்பு தளர்ச்சிக்கு என்ன யோகா செய்வது என்று பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டு செய்து பார்க்கலாம்.

நாம் யோசிக்கும் செயல்கள் ஒரு சில நேரத்தில் மூளையில் தசைகளுக்குள் இருக்கும் பெரிய நரம்புகளுக்கு சென்றடைவதில் பிரச்சனை ஏற்படுவதே நரம்பு தளர்ச்சி ஆகும். இத்தகைய நரம்பு தளர்ச்சிக்கு இரண்டு வகையான முத்திரைகள் செய்ய வேண்டும். அந்த முத்திரைகள் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்⇒ முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க

சுமண முத்திரை செய்முறை:

சுமண முத்திரை

முதலில் நீங்கள் முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய இரண்டு கைகளையும் பிரட்டி சாமி கும்பிடுவது போல வைத்து இரண்டு கைகளில் உள்ள நகங்களும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு வைத்து கொண்டு அதன் பிறகு இரண்டு கண்களையும் முடி 5 முறை மூச்சை பொறுமையாக இழுத்து வெளியே விடுங்கள். இதுவே சுமண முத்திரை ஆகும்.

சுமண முத்திரை பயன்கள்:

நரம்பு தளர்ச்சிக்கு மட்டும் இல்லாமல் நுரையீரல் பிரச்சனைக்கும் ஒரு சிறந்த தீர்வாக சுமண முத்திரை இருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் காலையில் செய்தால் விரைவில் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

பிரித்வி முத்திரை செய்முறை:

சுமண முத்திரை செய்த உடனே பிரித்வி முத்திரையை செய்து விட வேண்டும். பிரித்வி முத்திரை செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதுகு எலும்பு நேராக இருக்கும் படி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு அதன் பிறகு இரண்டு கைகளில் இருக்கின்ற பெருவிரலும் மோதிரவிரலும் தொடுமாறு வைத்து கொண்டு மற்ற மூன்று விரல்களும் கீழ் நோக்கி இருக்குமாறு வைத்து 5 முறை மூச்சை பொறுமையாக இழுத்து விடுங்கள். இதுவே பிரித்வி முத்திரையாகும்.

அதற்கு பிறகு 1 நிமிடம் மூச்சை பொறுமையாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.  இதில் சொல்லப்பட்டுள்ள நிலைகளை 21 நாட்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை பெறலாம்.

பிரித்வி முத்திரை பயன்கள்:

பிரித்வி முத்திரையை தினமும் செய்து வந்தால் நரம்பு மண்டலங்கள் வலுப்பெற்று நரம்பில் எந்த விதமான பிரச்சனை வருவதையும் தடுக்கிறது.

குழந்தைகள் இந்த முத்திரையை செய்தால் வளர்ந்த பிறகு அவர்களுக்கு நரம்பு தளர்ச்சி வராது.

இந்த முத்திரையை செய்தால் மன அழுத்தம் குறைந்து ஆனந்தமாக வாழ உதவி  செய்கிறது.

இதையும் படியுங்கள் 👇 👇 👇  யோகா யாரெல்லாம் செய்ய கூடாது தெரியுமா.?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com