வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த யோகாவை மட்டும் செய்தால் காலத்திற்கும் உங்களுக்கு பாதவெடிப்பு வரவே வராது..!

Updated On: February 6, 2023 6:54 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Patha Vedippu Neenga Yoga

இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு தகவலை பற்றி தான் கூறப்போகின்றோம். அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று. ஆண்களை விட பெண்களுக்கே பாதவெடிப்பு அதிகமாக காணப்படுகிறது. பெண்கள் எப்பொழுதும் தண்ணீரிலேயே நின்று வேலைபார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக சிலர் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் மருத்துவரிடம் சென்று காசை செலவு செய்வார்கள். இனி இப்படி செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த யோகாவை மட்டும் செய்யுங்கள் காலத்திற்கும் உங்களுக்கு பாதவெடிப்பு வரவே வராது. 

குறட்டையை குறைக்க மாத்திரை எதுவும் வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்..!

பாதவெடிப்பு நீங்க யோகா:

சிலருக்கு பாத வெடிப்பு அதிகமாக காணப்படும். அதனால் அவருக்கு பாதங்களில் வலி, எரிச்சல் போன்றவை உண்டாகும். இந்த பாதவெடிப்பு வருவதற்கு முக்கிய காரணம் உடலில் நீர் சத்து இல்லாமல் வறட்சியாக இருப்பது, அதிக உடல் எடை, தண்ணீரில் அதிக நேரம் நிற்பது, காலணிகள் அணியாமல் எப்போதும் வெறும் காலில் நடப்பது போன்றவற்றாலும் பாதவெடிப்பு ஏற்படுகிறது. இதனை நாம் யோகா செய்வதன் மூலம் சரி செய்யலாம்.

பிருத்வி முத்திரை:

பிருத்வி முத்திரை

இதைச் செய்வதற்கு பத்மாசனம் போன்ற வசதியான தோரணையில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

பின் உங்கள் கண்களை மூடிக்கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட வேண்டும்.

பொறுமையாக கண்களை திறந்து உங்கள் கைகளை தொடையின் மேல் பகுதியில் வைத்து, உங்கள் கட்டை விரலின் நுனியால் மோதிர விரலின் நுனியைத் தொடவேண்டும். மீதமுள்ள மூன்று விரல்களும் தரையை நோக்கி இருக்கவும்.

பின் 3 முறை மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். இதுபோல தினமும் காலை மாலை 2 நிமிடங்கள் செய்து வர வேண்டும்.

பிருத்வி முத்திரை பயன்கள்:

  • இதுபோல செய்வதால் முடி வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்வை குறைக்கிறது.
  • இந்த முத்திரை உடல் வெப்பத்தை தணித்து பாத வெடிப்பு வராமல் பாதுகாக்கிறது.
  • இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
  • உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பலப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்⇒ சர்க்கரை நோய் குணமாக இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!

பிராண முத்திரை: 

பிராண முத்திரை

தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் பத்மாசனம் தோரணையில் அமர வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கும் படி நேராக உட்கார வேண்டும்.

பிறகு கண்களை மூடி, ஒரு நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியே விடவும்.

பின் உங்கள் கைகளை தொடையின் மேல் பகுதியில் வைத்து, மோதிர விரல் சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு அழுத்தம் கொடுக்கவும்.

மற்ற இரண்டு விரல்களும் நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும் இதுபோல செய்ய வேண்டும்.

இந்த பிராண முத்திரையை தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்கள் செய்து வர வேண்டும்.

பிராண முத்திரை பயன்கள்: 

  • நம் உடலில் பிராண சக்தியை சிறப்பாக சேமிக்கிறது.
  • கண் நரம்புகள் நன்கு இயங்குவதற்கு உதவுகிறது.
  • நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து பாதவெடிப்பு வராமல் தடுக்கிறது.
முடி வளர யோகாசனமா புதுசா இருக்கே..! இதை ட்ரை பண்ணுங்க

 

மேலும்  இதுபோன்ற யோகாசனம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> யோகா 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now