தினமும் தூங்கும் முன் இந்த ஆசனத்தை மட்டும் செய்யுங்கள்..! அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்..!

viparita karani asana benefits in tamil

விப்ரீத் கரணி ஆசனம்

ஹலோ பிரண்ட்ஸ்..! நாம் வாழும் இந்த நவீன உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். நோய்க்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி, நோய்களை கண்டுபிடித்து வருகிறோம். இந்த சூழலில் யாருக்கு என்ன செய்யும் என்று சொல்லவே முடியாது. நாம் என்ன தான் நோய்க்கு மருந்து மாத்திரைகளை உண்டு வந்தாலும் அதனால் எந்த பயனும் இருப்பதில்லை. ஆனால் அனைத்து நோய்களையும் சரி செய்யும் மருந்து என்றால் அது தான் யோகாசனம். மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத நோய்களை கூட யோகாசனத்தால் குணப்படுத்த முடியும். அந்த வகையில் இன்று விப்ரீத் கரணி ஆசனம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உயரமாக வளர வேண்டும் என்று ஆசையா.. அப்போ இப்படி செய்யுங்க

விப்ரீத் கரணி ஆசனம் செய்யும் முறை: 

விப்ரீத் கரணி ஆசனம் செய்யும் முறை

  • முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சுவரின் பக்கத்தில் படுத்து கொள்ளவும்.
  • அடுத்து திரும்பி உங்கள் கால்களை ஒன்று சேர்த்து சுவரின் மேலே உயர்த்தவும்.
  • அதே சமயத்தில் தலையை நகர்த்தி தோள் பட்டைகளை விரிப்பின் மீது வைக்கவும்.
  • உங்கள் கால்களை 90 டிகிரிக்கு நீட்டிக் கொள்ளவும்.
  • உடல் கனம் முழுவதும் தோள்பட்டை கழுத்தில் இருக்கும் படி வைக்கவும். கைகளை சாதாரணமாக தரையில் வைக்கவும்.
  • பின் 10 வினாடிகள் வரை மூச்சை இழுத்து விட வேண்டும்.
  • பின் கால்களை இறக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க யோகாசனம்

விப்ரீத் கரணி ஆசனத்தின் நன்மைகள்:

விப்ரீத் கரணி ஆசனம் செய்யும் முறை

இந்த ஆசனம் செய்வதால் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி, கார்டிசோலின் அளவைக் குறைத்து மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது.

தோள்கள், கழுத்து மற்றும் கீழ் முதுகில் உள்ள அழுத்தம் மற்றும் இறுக்கத்தை போக்க இந்த ஆசனம் உதவுகிறது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தும் அதேபோல மலச்சிக்கல் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

தைராய்டு சுரப்பியில் அதிக இரத்தம் பாய்வதால் தைராக்ஸின் போதுமான அளவு சுரந்து இரத்தத்தில் கலக்க உதுவுகிறது.

7 நாட்களில் உயரமாக வளர வேண்டுமா.. அப்போ இதை மட்டும் பண்ணுங்கள்

அதுபோல அட்ரீனல் சுரப்பியில் தலைகீழ் நிலையில் வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால் அதன் ஹார்மோன் அதிகமாக இரத்தத்தில் கலக்கிறது. எனவே இந்த ஆசனம் செய்வதால் அட்ரீனலின் மருந்தின் வேலை இயற்கையாக நடைபெறுகிறது. பிராணவாயு சூட்டினால் நுரையீரல்களிலுள்ள காற்றுக் குழாயின் இறுக்கம் தளர்த்தப்படுகிறது.

மேலும் இந்த ஆசனம் செய்வதால் கட்டி, முகப்பரு, முகத்தின் சுருக்கங்கள், இளநரை, எக்ஸிமா என்னும் தோல் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கிறது. நரம்பு மண்டலம், மூளை மண்டலம், ஐம்புலன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது. இரத்தமின்மை, பற்கள் ஆட்டம் ஆகியவற்றை சரி செய்ய இந்த ஆசனம் உதவுகிறது.

பக்கவாதம் வராமல் இருக்க இந்த யோகாசனத்தை செய்யுங்கள்

 

இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 யோகா